சென்னை டூ சேலம் அதிவிரைவு சாலை.. திருவண்ணாமலை வரை அமைவது ஏன்.. அரசின் பிளான் என்ன?
சென்னை: சென்னை சேலம் விரைவு சாலை அமைக்க முடியாமல் போனதால், இப்போது சேலம் செல்ல விழுப்புரம் உளுந்தூர் பேட்டை, ஆத்தூர் வழியாக வாகனங்கள் செல்கிறது. அடுத்ததாக வேலூர், கிருஷ்ணகிரி வழியாக சுற்றி செல்கிறார்கள்.. நேரடி பாதையாக திருவண்ணாமலை வழியாக அமைக்க முடியும் என்றாலும், அது கடந்த 8 ஆண்டுகளில் நடக்கவில்லை. அதேநேரம் சென்னை - திருவண்ணாமலை இடையே மட்டும் சுருக்கி விரைவுச் சாலை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பயண நேரம் 4 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறையும்.
சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்ல மூன்றே சாலை தான் உள்ளது. ஒன்று பூந்தமல்லி வழியாக பெங்களுர் சாலை, இன்னொன்று செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக செல்வது , மூன்றாவது வழி கிழக்கு கடற்கரை சாலை..

இதில் பெரும்பாலான மக்கள், அதாவது தமிழ்நாட்டின் 80 சதவீத மக்கள் பயன்படுத்தும் சாலை என்றால் செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக செல்லும் சாலை தான். இந்த சாலை வழியாகவே மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி என தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டமக்கள் செல்கிறார்கள். அதேபோல் கொங்கு மண்டலமான கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் என வணிக பகுதி மொத்தமும் விழுப்புரம் சாலை வழியாக போக வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
துரதிஷ்டவசமாகவோ, சரியான ஏற்பாடுகள் செய்யாததாலோ என்னவோ, செங்கல்பட்டு முதல் திருச்சி வழி இன்று வரை எட்டு வழிச்சாலை போடப்படவில்லை. ஏன் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள மக்கள் அடர்த்திக்கு எப்போதோ உயர்மட்ட சாலை அமைத்திருக்க வேண்டும்.. அதையும் இன்று வரை செய்யவில்லை.. அதன்விளைவாக ஒவ்வொரு வார இறுதியும் சென்னை மக்களுக்கு கடினமான பயணமாகவே இருக்கிறது.
செங்கல்பட்டு டூ உளுந்தூர்பேட்டை
அதிலும் செங்கல்பட்டு முதல் உளுந்தூர்பேட்டை வரை பாதையை கடப்பது என்பது கடினமாக மாறிவிட்டது. இவ்வளவு கடினமான பயணமாக மாறுவதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை இந்த வழித்தடத்தை • வழிச்சாலையாக அதிவிரைவாக மாற்றாததே காரணம் என்று புகார்கள் உள்ளது.
சென்னை சேலம் எக்ஸ்பிரஸ் சாலை
இது ஒருபுறம் எனில், இந்த பிரச்சனைகளை மையமாக வைத்து தான், கோவை, சேலம், கொச்சி, மேற்கு வழித்தட மக்கள் தனியாக போகும் வழியில் சென்னை - சேலம் விரைவுச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த காரணத்தால், 2022-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக சென்னை - சேலம் விரைவுச் சாலைத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால்அதே வழித்தடத்தைப் பின்பற்றி சென்னை திருவண்ணாமலை இடையே மட்டும் புதிய திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை வரை விரைவுச்சாலை
இந்த சாலை முன்பு திட்டமிடப்பட்ட வழித்தடத்தில் அப்படியே அமைக்கப்பட உள்ளது. தமிழக அரசு சென்னையின் புறநகர் பகுதியான ஒரகடத்தில் தொடங்கி மற்றும் திருவண்ணாமலை இடையே செய்யார் வழியாக சுமார் 140 கி.மீ தூரத்திற்கு ஒரு புதிய பசுமை வழி விரைவுச் சாலையை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறது. முன்பே கூறியபடி சென்னை - சேலம் விரைவுச் சாலைத் திட்டத்தின் வழித்தடத்தை பின்பற்றி, அந்த திட்டத்திற்கு மாற்றாக இத்திட்டம் அமைக்கப்படுகறிது. இத்திட்டம் பல கட்டங்களாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இரண்டு மணி நேரம்
இந்தத் திட்டம் நிறைவேறினால், சென்னை முதல் திருவண்ணாமலை வரையிலான பயண நேரம் சுமார் நான்கு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரமாகக் கணிசமாகக் குறைந்துவிடும். அதாவது தாம்பரம் அடுத்த ஒரக்கடம் தொடங்கி காஞ்சிபுரம் கடந்து செய்யாறு வழியாக திருவண்ணாமலை செல்கிறது இந்த சாலை.
காஞ்சிபுரம் திருவண்ணாமலை சிப்காட்
இந்த சாலை, வணிக நோக்கில் அமைக்கப்படுகிறது. எனவே திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சிப்காட் மற்றும் பிற தொழில்முறை மண்டலங்களிலிருந்து காட்டுப்பள்ளித் துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகத்திற்கு சரக்கு கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இதில் சரக்கு வாகனங்கள் நேரடியாக பயணிக்கும் என்பதால், பயண நேரமும் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை கோவில்
இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் உள்ளது. அண்மைக்காலமாக திருப்பதிக்கு நிகராக ஆந்திராவில் இருந்தும், சென்னையிலும் பிற இடங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆந்திர யூடியூபர்களின் அதிரடியான விழிப்புணர்வு வீடியோக்களால் மொத்த ஆந்திரா, தெலுங்கானா மக்கள் இப்போது அடிக்கடி திருவண்ணாமலை வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இதனால் வழக்கத்தைவிட தினமும் திருவிழா கூட்டம் போல் திருவண்ணாமலை சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது.
ஒரக்கடம் முதல் செய்யாறு வரை எப்படி ரூட்
எனவே தாம்பரம் அடுத்த ஒரக்கடத்தில் தொடங்கும் இந்த ஆறு வழிச் சாலை சென்னை புறச்சக்கரச் சாலையின் (CPRR) கீழ் ஒரகடம் அருகே தொடங்கி, செய்யார் சிப்காட் மற்றும் தேசூர் வழியாகத் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளத.. இந்தத் திட்டத்தை மாநில நெடுஞ்சாலைத் துறையே செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, ஒரகடம் முதல் செய்யார் சிப்காட் வரையிலான 68 கி.மீ தூரம் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.. இரண்டாம் கட்டமாக செய்யார் சிப்காட் முதல் திருவண்ணாமலை வரை சுமார் 72 கி.மீ தூரம் நீட்டிக்கப்பட இருக்கிறது.
நிலம் கையகப்படுத்தும் பணி
ஒரகடம் முதல் செய்யார் வரையிலான 68 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி ஏற்கனவே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. நிலம் கையகப்படுத்தப்பட்டதும், டெண்டர் கோரும் செயல்முறை தொடங்கும். இதற்கு இன்னும் இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகலாம். இரண்டாம் கட்டத்திற்காக, நிலம் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதி இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது என்று மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
34 கிராமங்களை கடந்து செல்லும்
முன்மொழியப்பட்ட ஒரகடம் - செய்யார் நெடுஞ்சாலை, ஒரகடம் சிபிஆர்ஆர்-லிருந்து தொடங்கி செய்யார் சிப்காட் அருகே உள்ள மங்கால் கூட்டுச் சாலை வரை செல்லும். அங்கிருந்து இந்த வழித்தடம் திருவண்ணாமலை மாவட்டம் வழியாக 34 கிராமங்களைக் கடந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும்.
ஆட்சியர் உத்தரவு
சமீபத்திய உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையை முழுமையாக மதிப்பீடு செய்ய வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். செய்யார் வட்டத்தில் ஏழு கிராமங்கள், வந்தவாசி வட்டத்தில் எட்டு கிராமங்கள், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் 14 கிராமங்கள் மற்றும் திருவண்ணாமலை வட்டத்தில் ஐந்து கிராமங்கள் எனத் தோராயமாக 307.95 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது.
சென்னைக்கு நல்ல செய்தி
செய்யார் தொழில்முறை வழித்தடத்தை வேலூர் வரை நீட்டிக்க முன்பு பரிசீலிக்கப்பட்டது, ஆனால் அதற்குப் பதிலாகத் திருவண்ணாமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை திருவண்ணாமலை சாலை திட்டம் மட்டுமின்றி, சிபிஆர்ஆர் திட்டமும் சென்னையை சுற்றி செயல்படுத்தப்பட உள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி மகாபலிபுரம் அருகே பூஞ்சேரியில் முடிவடைகிறது. இந்த சாலை தச்சூர், திருவள்ளூர் புறவழிச்சாலை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சிங்கபெருமாள் கோவில் வழியாகச் செல்கிறது.
-
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது?












Click it and Unblock the Notifications