சசிகலா காலை சுற்றிய பாம்பு.. 3 வருடம் சிறைக்கு போக சான்ஸ்? எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாகத்தின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் எப்படியாவது மீண்டும் இணைந்துவிட வேண்டும் என்பதில் சசிகலா தீவிரமாக இருக்கிறார். இதற்காக அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில்தான் அவரின் காலை பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் அடிபடுகின்றன.

சசிகலா கடந்த வாரம்தான் திருச்செந்தூர் சென்று யாகம் எல்லாம் வளர்த்தார். அங்கு ஓ ராஜாவை சந்தித்ததோடு, தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலருடன் சைலன்ட் மீட்டிங்கும் போட்டார். ஜாதி ரீதியாகவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி காரணமாகவும் அதிமுக இரட்டை தலைமை மீது தென் மண்டல நிர்வாகிகள் கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்தே தென் மண்டல நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்கும் வகையில் சசிகலா இந்த பயணத்தை மேற்கொண்டார். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது.

பயணம்

பயணம்

இதனால் கொங்கு மண்டலத்திலும் நிர்வாகிகள் ஆதரவை பெறும் திட்டத்தில் சசிகலா இருக்கிறாராம். சசிகலா தனது கணவர் எம்.நடராஜனின் நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூருக்கு வரும் 20ம் தேதி செல்கிறார். விளாரில் அதிமுக நிர்வாகிகள், டெல்டா மாவட்ட தலைகளை சந்திக்க உள்ளார். அங்கிருந்து அப்படியே எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையான சேலத்திற்கு செல்கிறார் சசிகலா. சேலத்தில் தனது ஆதரவு திரட்டும் திட்டத்தில் அவர் இருக்கிறாராம்.

தயார்

தயார்

சேலத்திலேயே அதிமுக நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து எடப்பாடிக்கு ஷாக் தருவதுதான் சசிகலா திட்டம். ஆனால் இதெல்லாம் பிரச்சனையே இல்லை. சசிகலாவை சமாளிக்க எனக்கு தெரியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் எடப்பாடி. சசிகலாவின் சேலம் விசிட்டை எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார்கள். அதனைக் கேட்டு, 'கூரை ஏறி கோழிப் பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன்னு சொன்னானாம் ‘ என்ற பழமொழியை சொல்லி, சசிகலாவை முதலில் சென்னையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் போடச் சொல்லுங்களேன் பார்க்கலாம் என்று கூறி இருக்கிறாராம்.

சென்னை

சென்னை

அவர் வலுவாக இருப்பதாக சொல்லப்படும் டெல்டாவிலோ, தென் மண்டலத்திலோ மீட்டிங் போடட்டும். அப்புறம் எனது ஏரியாவில் கூட்டம் நடத்தட்டும் என்று கமெண்ட் பண்ணியிருக்கிறார். ஆனால் அதே சமயம் சசிகலாவிற்கு எதிராக கவனமாக சில திட்டங்களையும் எடப்பாடி போட்டு வருகிறாராம். அதன்படி, ''சேலத்தில் சசிகலா வருகிற போது கட்சி நிர்வாகிகள் யாரும் அந்தப்பக்கம் தலை வைத்துக் கூட படுக்கக்கூடாது ; யாரேனும் கலந்துக் கொள்கிறார்களா? என இப்போதிலிருந்து கண்காணியுங்கள்'' என்று உத்தரவிட்டு இருக்கிறாராம்.

இன்ஸ்ட்ரக்‌ஷன்

இன்ஸ்ட்ரக்‌ஷன்

இது தொடர்பாக தனது வலதுகரமான சேலம் இளங்கோவனுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துள்ளாராம் எடப்பாடி. இதுமட்டுமல்லாமல், பெங்களூர் சிறையில் சொகுசு வசதிகளுக்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கு சீரியசாக போய்க்கொண்டிருக்கிறது. அதில் நிச்சயம் அவருக்கு சிறை தண்டனை கிடைக்கும். குறைந்த பட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 3 வருடங்கள் வரை சிறை தண்டனை உறுதி என்கிறார்கள்.

Recommended Video

    தேனி: சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் சேர்ப்பா? செல்லூர் ராஜூ சொன்ன சூப்பர் பதில்!
    எங்கே போவீங்க?

    எங்கே போவீங்க?

    அப்படி ஒரு தண்டனை கிடைக்காது என உறுதியாக சொல்ல முடியுமா? என்று சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு குறித்து தம்மிடம் பேசும் தென்மாவட்ட சீனியர்களிடம் இப்படி சீறி வருகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. அப்படி ஒருவேளை சசிகலா மீண்டும் சிறைக்கு போனால் மீண்டும் என்னிடம்தான் நீங்கள் வர வேண்டும். அவரை நம்பி செல்வது ஆபத்தானது என்று செக் வைத்து வருகிறாராம். சேலத்தில் கொடி நாட்ட சசிகலா நினைக்கும் போது அவரின் தென் மண்டலா அஸ்திவாரத்தை எடப்பாடி அசைத்துக்கொண்டு இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+