அதிர்ந்து போன செந்தில் பாலாஜி! ஒரே ஒரு குட்டி பஞ்சாயத்தில் மட்டும் 22 இடங்களில் ரெய்டு! என்ன காரணம்?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் அதிகாலையில் இருந்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆளும் திமுக தரப்பில் இந்த ரெய்டு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தினர்.

யல் எஸ்டேட் தொழில் துறையில் தமிழ்நாட்டில் முன்னணி நிறுவனமாக இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் ஜி ஸ்கொயர் நிறுவனம் கடந்த 2 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்ததாக பாஜக, அதிமுக குற்றஞ்சாட்டி வந்தது.
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து திமுகவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். திமுகவினரின் சொத்து பட்டியல்கள் என்று குறிப்பிடப்படும் எக்ஸல் சீட் ஒன்றை அவர் வெளியிட்டார்.
அதேபோல் முதல்வர் ஸ்டாலின் மீதும் சில புகார்களை அண்ணாமலை பிரஸ் மீட்டில் அவர் வைத்தார். திமுக மீது சரமாரி புகார்களை வைத்தார். திமுக அமைச்சர்களின் சொத்து மதிப்பு என்றும் சிலவற்றை காட்டினார். இதில் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்தும் கடுமையான புகார்களை அவர் பட்டியலிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின் இவர்களின் சொத்து உயர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் விளக்கம்;
இது தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தவறானது. ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது அல்ல.
ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவினர் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் அல்ல. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்று கூறியது.
பரபரப்பு: அந்த ரெய்டு தொடர்பாக வருமான வரித்துறை இன்னும் அறிக்கை எதுவும் வெளியிடாத நிலையில்தான் தற்போது திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை வருமான வரித்துறை குறி வைத்துள்ளது.
இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது வருமான வரித்துறை மூலம் வளைக்கப்பட்டு உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும் அதிக அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் குவிந்து ரெய்டு நடத்தி வருகின்றனர்.
மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களில் சோதனை நடக்கிறது.
ஏன் அங்கே ரெய்டு?
செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் அவருக்கு நிறைய உறவினர்கள் உள்ளனர். நெருக்கமான சொந்தங்கள் உள்ளனர். கட்சி நிர்வாகிகள் தாண்டி ரத்த சொந்தங்கள் அதிகம் உள்ளனர்.
அங்கே செந்தில் பாலாஜியின் பினாமிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், நெருக்கமான சொந்தங்களிடம் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என்றும் கருதி அங்கே அதிகாரிங்கள் 100க்கும் மேற்பட்டோர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications