Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கழுத்தில் காவி.. நடுக்கடலில் மோடி.. இதோ நாலா பக்கமும் கிளம்பி வந்துட்டாங்க! சுழலும் சென்னை அண்ணாசாலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியின் இன்றைய தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள சூழலில் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி, அங்குள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடுகிறார்.

Kanyakumari Chennai Anna Salai Narendra Modi

விதிமுறைகள்: கன்னியாகுமரியில் 3 நாட்கள் பிரதமர் தியானம் மேற்கொள்ள உள்ளநிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக கூறி, திமுக, காங்கிரஸ், சிபிஐ(எம்) கட்சிகள் எதிர்ப்பு கூறிவருகின்றன..

மோடியின் இந்த பயணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு திமுக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.. வாக்காளர்களைக் கவருவதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் செய்து விளம்பரப்படுத்த அனுமதித்திருப்பது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று திமுக கூறியிருக்கிறது.

காங்கிரஸ்: இதுபோலவே, பிரதமர் மோடியின் குமரி தியானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

அதுபோலவே, திண்டுக்கல் தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டவரும், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவருமான நெல்லை முபாரக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

"பிரதமர் மோடிக்காக 3 நாட்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்புடையது அல்ல. அதுமட்டும் இல்லாமல் தியானம் மூலமாக மோடி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் செயல் இது. ஆகவே, இது தேர்தல் விதிமீறல் நடவடிக்கையாகும். எனவே, இந்த நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார். அதாவது, அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

போஸ்டர்கள்: இப்படி அரசியல் கட்சிகளின் பரபரப்புக்கு நடுவில் சென்னையிலும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.. "தமிழ் மக்களை இழிவுப்படுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கே வருவதா? என்ற போஸ்டர்களில் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.. அத்துடன், #GOBACKMODI, இந்திய தேர்தல் ஆணையமே தூங்காதே என்றும், Hello Netizens..! Ready Start 1 2 3" என்றும் போஸ்டர்கள் பளிச்சிடுகின்றன.

சென்னை அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது.. கடந்த 4 மாதங்களில் எத்தனையோ முறை பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார்.. ஆனால், இந்த அளவுக்கு எதிர்ப்பு வரவில்லை.. குறிப்பாக GOBACKMODI என்ற வாசகங்கள், திமுக ஆட்சிக்கு பிறகு அவ்வளவாக காணப்படாத சூழலில், தற்போது மீண்டும் கிளம்பியிருப்பது கவனத்தை திருப்பி வருகிறது.

கண்டனம்: ஒடிசா பிரச்சாரத்தில், தமிழர்களை திருடர்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்திருந்தார்.. அதேபோல, தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசியிருந்தார். இதனால், இந்த 2 தலைவர்களுமே, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஒரு வாரம் கெடு வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில், இந்த 2 தலைவர்களுமே இன்று தமிழகம் வருகிறார்கள்.. இருவருக்கும் தமிழர்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதுரையில் இன்று அனைத்து அரசியல் கட்சிகள் சார்பாக கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்திருக்கிறது.

பரபரப்பு: இப்படி பெரும்பாலான அரசியல் கட்சி எதிர்ப்புகளுக்கு நடுவில் இவர்களின் வருகையானது, பாஜகவுக்கு வெற்றியை தேடி தருமா? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+