முருக பக்தர்கள் கோபத்துக்கு திமுக ஆளாயிடும்! இதெல்லாம் சந்தேகமா இருக்கே! கிளம்பி வந்தது யாரு பாருங்க
சென்னை : முருக பக்தர்கள் மாநாட்டை தி.மு.க., அரசு நடத்த முயன்றால், முருக பக்தர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக திகழ்வது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலாகும்.. எனவே, தினமும் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வருகை தந்து முருகனை தரிசித்து செல்கிறார்கள்.

அதேபோல, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போதும், பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். இந்த அளவுக்கு பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்ந்து பழனியில், முருகன் மாநாடு நடத்த போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அறநிலையத்துறை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25 ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில், இந்த மாநாடு குறித்து இந்து முன்னணி தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறது.
இதுகுறித்து, இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், "முருக கடவுள் பக்தர்களை இணைத்து, அகில உலக முருக பக்தர்கள் மாநாட்டை தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
சந்தேகம்: நாத்திகம் பேசும், ஹிந்து மத நம்பிக்கைகளை தரம் தாழ்ந்து பேசும் தி.மு.க., அரசு, இதை நடத்துவது முருக பக்தர்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம், முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது செம்மொழி மாநாடு என்ற தலைப்பில் கேளிக்கை விழாவை நடத்தி, தன்னுடைய குடும்பத்தாருக்கு மட்டும் விளம்பரம் தேடியதை மக்கள் மறக்கவில்லை.
அதேபோலவே, தற்போதைய தி.மு.க., அரசும் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த முயன்றால், முருக பக்தர்களின் கோபத்திற்கும் சத்ருசம்ஹார மூர்த்தியான ஜெயந்திநாதனின் உக்கிரகத்திற்கும் ஆளாக நேரிடும்" என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications