அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?
சென்னை: ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்று முதல்வர் விஜய்க்கு உத்தரவாதம் கொடுத்துள்ளார் திருமாவளவன். இவர், இப்படி பேசுவதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது என்கிறார்கள்.
அதிமுக அதிர்ப்தி எம்.எல்.ஏ.க்கள் தவெகவின் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்கிற செய்திகள் வந்த போது, ''அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டால் அரசுக்கு தந்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவோம்'' என்று அதிரடி காட்டினார் திருமாவளவன். இது, முதல்வர் விஜய்யை கடுப்பாக்கியது. குறிப்பாக, 10 நாள் கூட ஆகவில்லை; அதற்குள் மிரட்டுகிறார்களா? என்கிற கோபம் விஜய்க்கு வந்தது.

இதனை அமைதியாக உள்வாங்கிக் கொண்ட முதல்வர் விஜய் , தனது கோபத்தை வெளிக்காட்டவில்லை. இதற்கு மாற்று ஐடியாவை யோசித்து விட்டு பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டாராம் விஜய். அப்போது தான், ''ஆரம்பத்திலேயே இப்படி மிரட்டுகிறார்கள் என்றால் இவர்களை வைத்துக் கொண்டு 5 ஆண்டுகள் நல்லாட்சியை தந்து விடமுடியுமா? இன்னைக்கு திருமா மிரட்டுகிறார்; நாளைக்கு காங்கிரஸ் மிரட்டும்; அடுத்த நாள் கம்யூனிஸ்ட்டுகள் மிரட்டும். இப்படி மிரட்டலிலேயே நாம் இருந்தால் எப்படி நல்லாட்சி தர முடியும் ? ''என்று ஜான், ஆதவ், விஷ்ணு, புஸ்சி ஆனந்த் ஆகியோரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அப்போது உருவானதுதான், நம்மை ஆதரித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை சந்தித்து ஆட்சிக்கான பெரும்பான்மையை வலிமையாக்கி கொள்ளலாம் என்கிற திட்டம்.
அதன்படிதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இதனை எதிர்பார்க்காத திருமாவளவன், கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில், ''அதிமுகவினர் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைவதை ஆரோக்கியமானதாக விசிக பார்க்கவில்லை'' என்று ஆரம்பித்து பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்ட அவர், ''தவெக தலைவருக்கும் முன்னணி பொறுப்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள். எந்த சூழலிலும் உங்கள் ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். நம்பிக்கையோடு 5 ஆண்டு காலம் ஆட்சி செய்யுங்கள். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களை தவெகவில் இணைத்துக்கொள்வது என்பது தவெகவின் மீதான நம்பகத்தன்மையைப் பாதிக்கச் செய்யும். எனவே தவெக தலைமை இதில் கவனமாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
அதாவது, ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களால் இடைத்தேர்தல் வருகிற போது, அதில் தவெக வேட்பாளர்கள் ஜெயித்து தவெகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்து விட்டால், விசிகவின் ஆதரவு தங்களுக்குத் தேவை இல்லை என்று ஆதவ் அர்ஜுனாவை வைத்தே அரசியல் செய்வார் விஜய். ஆட்சி அதிகாரத்தின் சுவையை விசிக அனுபவித்து வருவதையும், ஆட்சி அதிகாரத்தின் மூலம் 5 ஆண்டு காலத்தில் தேவையான அரசியலை சாதித்துக் கொள்ளலாம் என்பதையும் தீர்மானித்துத்தான் தவெக அமைச்சரவையில் இணைந்தார் திருமாவளவன். தற்போது நடக்கும் அரசியல் மாயஜாலங்களால் , தங்களின் திட்டங்களும் எதிர்பார்ப்புகளும் தூள் தூளாகலாம் என்பதால் தான், எங்களால் எந்த ஆட்சி கவிழ்ப்பும் வராது என உத்தரவாதம் தருவது போல அட்வைஸ் செய்கிறார் திருமா ''என்று விவரிக்கிறார்கள் தவெகவினர்.
- சிறப்பு நிருபர் எழில்
-
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
மந்தையில் இருந்து பிரிந்த 3 ஆடுகள்..நொறுங்கிய அதிமுக! இனி விஜய்க்குதான் நல்ல காலம்! எப்படி தெரியுமா? -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
எக்ஸ்பிரஸ் வேகம்.. 100% குதிரை பேரம்.. தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்.. இன்பதுரை போட்ட பதிவு -
சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி -
தவெகவில் இணையப் போகிறீர்களா?.. 25 எம்.எல்.ஏக்களில் இப்போது 17 பேர் தான்.. டென்ஷனாகிய சி.வி.சண்முகம்












Click it and Unblock the Notifications