திருப்பரங்குன்றம் கேஸ்.. நவோதயா பள்ளி பற்றி பேசாத விஜய்.. பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கிறாரா? ஷாக்!
சென்னை: ஈரோட்டில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பல முக்கியமான விஷயங்களை பேசாமல் தவிர்த்து உள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்ட நாடு உற்று நோக்கும் தமிழ்நாட்டின் முக்கிய விவகாரங்களை பேசாமல் தவிர்த்து உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம், சமீபத்திய தமிழக அரசியல் வரலாற்றில் மத மற்றும் அரசியல் ரீதியிலான பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மதம், மதச்சார்பின்மை, மற்றும் அரசின் அதிகாரம் குறித்த வாதங்கள் இந்தப் பிரச்சனையில் இணைந்திருப்பதால், பல அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளன.

ஆனால், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனரான விஜய், இந்த விவகாரம் குறித்து மௌனம் சாதிப்பது பரவலான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
திருபரங்குன்றம் வழக்கு - அரிதான சட்ட போராட்டம்
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, திருபரங்குன்றம் மலையில் மீது உள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பின்னரே இக்கோயில் விவகாரம் தீவிரம் அடைந்து சர்ச்சைக்கு உள்ளானது.தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு செயல்படுத்தப்படாதபோது, இந்து அமைப்புகள் தலைமையில் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. பாஜக தொண்டர்களும் இதில் கலந்துகொண்டனர். மோதல்கள் ஏற்பட்டதையடுத்து, போலீசார் பாஜகவினர் மற்றும் இந்து முன்னையினரை கைது செய்தனர். அண்மைக் காலங்களில் மதக் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையே இத்தகைய நேரடி மோதலை தமிழ்நாடு இப்படி கண்டது அரிதான நிகழ்வு.
மௌனம் காக்கும் விஜய்
இத்தகைய முக்கிய நிகழ்வுகளுக்கு மத்தியில், விஜய்யின் கட்சி முற்றிலும் மௌனம் காத்து வருகிறது. இந்த விவகாரம் மத ரீதியான கோரிக்கையாக மட்டுமல்லாமல், மதச்சார்பற்ற ஆட்சி மற்றும் அரசு அதிகாரத்திற்கான ஒரு சோதனையாகவும் பார்க்கப்படுகிறது.
1. சமூக நீதி கட்சி, மதச்சார்பற்ற கட்சி, பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சொல்லும் விஜய் இந்த திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசவில்லை.
2. தமிழக வெற்றி கழகம் இன்னும் ஆரம்ப அரசியல் கட்டத்தில் இருப்பதாலும், பதற்றமான மத சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்பதாலும் மௌனம் காப்பதாக அக்கட்சிக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால் தீவிர மத விவகாரத்தில் கூட நிலைப்பாடு எடுக்க முடியாத விஜய் எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
3. முக்கியமாக சட்ட ஒழுங்கு, நீதிமன்ற நிலைப்பாடு குறித்த கேள்விகள் எழும் நேரத்தில் விஜய் அதில் மௌனம் காப்பது கடுமையான விவாதங்களை சந்தித்துள்ளது.
4. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சொன்னால் மட்டும் போதுமா? முக்கியமான விஷயத்தில் குரல் கொடுக்க தெரியாத என்ற கேள்வி எழுந்துள்ளது.
5. புதுச்சேரியில்தான் பேசவில்லை.. அது வேறு யூனியன் பிரதேசம். தமிழ்நாட்டில் ஈரோட்டில் கூட இதை விஜய் பேச மாட்டாரா என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் அவர் பாஜகவிற்கு மறைமுகமாக ஆதரவு தருகிறாரோ.. அல்லது நேரடியாகவே பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறாரோ என்ற கேள்வி உள்ளது.
6. ஏற்கனவே பாஜகவின் நவோதயா பள்ளிகள் திணிப்பு விவகாரத்தில்விஜய் குரல் கொடுக்கவில்லை. காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றியது, காந்தி பெயரை நீக்கியது பற்றியும் விஜய் பேசவில்லை.
7. பாஜகவை விமர்சனம் செய்யும்.. பாஜக மூலம் தமிழ்நாடு பாதிப்பு அடைவதாக சொல்லப்படும் விஷயங்களில் எல்லாம் விஜய் குரல் கொடுக்காமல் அமைதியாகவே இருக்கிறார். பாஜகவை நேரடியாகவோ.. மறைமுகமாகவோ ஆதரிக்கிறாரோ என்று கேட்கும் அளவில் விஜய் மௌனம் காக்கிறார்.
8. இதுவரை SIR பற்றி வெளிப்படையாக எங்கேயும் விஜய் எதிர்ப்பு தெரிவித்து பேசவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திமுக ஆதரவாளர்கள் சொல்வது போல உண்மையில் விஜய் பாஜக சப்போர்ட் நிலைப்பாடுதான் எடுக்கிறாரோ என்ற முக்கிய கேள்வி அவரின் செயல்பாடுகளால் எழ தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications