Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? காரணங்களை அடுக்கி பூரித்த முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வெற்றி பெற்றதை திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஏன் இவ்வளவு கொண்டாட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் காரணங்களை லிஸ்ட் போட்டு சொல்லியிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமான நிலையில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக சி அன்புமணி, சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா உள்பட 29 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

vikravandi by election 2024 mk stalin dmk 2024

இதில், திமுகவின் அன்னியூர் சிவா மொத்தம் 124053 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாமக வேட்பாளர் சி அன்புமணி 56296 ஓட்டுகள் மட்டுமே வாங்கி தோல்வியடைந்தார். அன்னியூர் சிவா 67,757 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் சி அன்புமணியை வீழ்த்தினார். தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா டெபாசிட் இழந்தார். அவர் வெறும் 10,602 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.

மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அபிநயா உள்பட 27 பேர் டெபாசிட் இழந்தனர். பாமக வேட்பாளர் தோற்றாலும் டெபாசிட் வாங்கினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஏன் இவ்வளவு கொண்டாட்டம் என்ற காரணங்களை சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களத்தில் கழக வேட்பாளர் திரு. அன்னியூர் சிவா தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ம.க வேட்பாளரை 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த மகத்தான வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடாமல் அ.தி.மு.க. ஒதுங்கி நின்று, தனது கள்ளக்கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. தி.மு.க. வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மைச் சமுதாயத்தினர் வசிக்கின்ற விக்கிரவாண்டி தொகுதியில் சமூகநீதிக் கொள்கை வழியாக அந்தந்தச் சமுதாயங்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் காண வழிவகுத்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் என்பதை தொகுதிவாசிகள் மறந்துவிடவில்லை.

கடந்த மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, வளர்ச்சிப் பாதையில் அவர்களை அழைத்துச் செல்கிறது. இடைத்தேர்தல் பரப்புரையில் வி.சி.க. தலைவர் அன்புச் சகோதரர் முனைவர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்கள் இதனைச் சிறப்பாக எடுத்துக்காட்டி வாக்கு சேகரித்து வெற்றிக்குத் துணை நின்றார்.

கழக அரசுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட சதிகள், சாதி - மத வன்முறையைத் தூண்டுவதற்கான வேலைகள், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் மீதும் கழகத்தின் மீதும் வைக்கப்பட்ட மலிவான - மட்டமான அவதூறுகள், எதிராகக் களத்தில் நின்றவர்களும் நிற்பதற்குப் பயந்தவர்களும் உருவாக்கிக் கொண்ட ரகசிய ஒப்பந்தங்கள் இவை எல்லாவற்றையும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் முறியடித்து, மகத்தான வெற்றியை வழங்கியிருக்கிறார்கள் என்பதுதான் மகிழ்ச்சிக்கான காரணம்.

மக்கள் எதிர்பார்க்கின்ற திட்டங்களை அறிவித்து அவற்றை முழுமையாகச் செயல்படுத்துவதும், யாரும் எதிர்பாராத எந்த ஒரு அசம்பாவித நிகழ்வு நடந்தாலும் அதற்குப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு அதனைச் சரிசெய்யும் நேர்மைத் திறமும் நிர்வாகத் திறனும் கொண்டதுதான் திராவிட மாடல் அரசு.

திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களுக்கு நற்சான்றிதழ் அளித்துத் தி.மு.கழகத்திற்கு மகத்தான வெற்றியை வழங்கி, அவதூறுகள் பரப்பி - சதி செய்ய நினைத்த வீணர்களுக்கு விடையளித்திருக்கிறார்கள் விக்கிரவாண்டி வாக்காளர்கள்.

இந்த வெற்றியைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்குக் காணிக்கையாக்கி, மக்களுக்குத் தொண்டாற்றும் நம் பணியைத் தொடர்ந்திடுவோம். தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியுடன், நாடு தழுவிய அளவில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

அடுத்தடுத்த தேர்தல் களங்களுக்கு ஆயத்தமாவதுடன் அடுத்தடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கான சிந்தனைகளுடனும் அதனைச் செயல்படுத்தும் வலிமையுடனும் பயணிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+