"விபச்சாரம்".. ஜோலார்பேட்டையில் ஜோராக நடந்த "பிசினஸ்".. 2 மாசத்துக்கு ஒருமுறை புது வீடு.. அக்கிரமம்
விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்
சென்னை: 2 மாதத்துக்கு ஒருமுறை வீட்டை காலி செய்து கொண்டே, பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளது ஒரு கும்பல்..!
தமிழகத்தில், சமீப காலமாகவே சட்டம் ஒழுங்கு பிரச்சனை, குற்ற செயல்கள் ஆங்காங்கே தலைதூக்கி வருகிறது.. இத்தகைய செயல்களை எதிர்க்கட்சிகளும் விமர்சித்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், கடந்த வாரம், காவல்துறை மற்றும் உயர்அதிகாரிகள் 2 நாள் மாநாடு சென்னையில் நடந்தது.. இந்த 2 நாளுமே முதல்வர் தலைமையேற்று பேசினார்.

ஸ்டாலின் அட்வைஸ்
அப்போது சில முக்கிய அறிவுரைகளையும் காவல்துறைக்கு வழங்கியிருந்தார்.. அதில், குற்றசெயல்களில் யார் ஈடுபட்டாலும்சரி, தயவுதாட்சண்யம் பாராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக தண்டனை தரப்பட வேண்டும், சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும், பெண் பிள்ளைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகளையும், கண்டிப்புகளையும் கூறியிருந்தார்.

என்கவுன்ட்டர்
அதன்படி, காவல்துறை அதிரடியாக தன்னுடைய வேலையில் இறங்கியது.. அடுத்த நாளே, நெல்லையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.. நேற்றுகூட சென்னையில் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது.. சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு சொந்தமான ஆர்ச்சிட் ரிசார்ட்டில் அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாக தாம்பரம் போலீசுக்கு தகவல் கிடைக்கவும், விரைந்து சென்று இரவு 1 மணி முதல் விடிய விடிய சோதனை நடத்தினர்...

மதுவிருந்து
மது விருந்தில் கலந்துகொண்ட சுமார் 500 ஆண்கள், நடனமாடிய சுமார் 50 பெண்கள் உள்ளிட்ட மொத்த பேரையும் பிடித்து ஜெயிலில் வைத்தது. அந்த வகையில், பாலியல் குற்றவாளிகள் 2 பேரை ஜோலார்பேட்டையில் போலீஸ் கைது செய்துள்ளது.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்து பால்நாங்குப்பம் என்ற பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.. இதற்காகவே தனியாக வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து பாலியல் தொழில் செய்து வந்திருக்கிறார்கள்..

ரகசிய தகவல்
ரகசிய தகவலை தொடர்ந்து, போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.. அப்போது அங்கு ஒரு பெண், ஒரு ஆண் இருவரும் கையும் களவுமாக சிக்கி உள்ளனர்.. இவர்கள் பாலியல் தொழில் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது... இதைதவிர, கஸ்டமர்களாக 4 ஆண்களும், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 2 பெண்களும் அதே வீட்டிற்குள் இருந்தனர்... அவர்கள் மொத்த பேரையும் ஜீப்பில் அள்ளிக் கொண்டு போனது போலீஸ்.. அவர்களிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

வாடகை வீடுகள்
இவர்கள் 3 மாதங்களுக்கு முன்புதான் இந்த பகுதிக்கு புதிதாக வந்தார்களாம்.. பாலியல் தொழில் நடத்துவதற்காகவே, தனியாக இருக்கும் ஒரு வீட்டை தேடிப்பிடித்துள்ளனர்.. இதற்காகவே, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்களை, பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வருவார்களாம்.. அதுமட்டுமல்ல, 2 மாசத்துக்கு ஒருமுறை, குடியிருக்கும் அந்த வாடகை வீட்டை உடனே மாற்றி வேறு இடத்துக்கு குடிபோவார்களாம்..

கூண்டோடு கைது
இப்படியே ஏரியா விட்டு ஏரியா இடம்மாறி தொழில் செய்து வந்த நிலையில் இப்போது சிக்கி கொண்டுள்ளனர்.. குடும்ப வறுமைக்காக அந்த பெண்கள் இப்படி ஒரு காரியத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது.. இறுதியில், கைதான 3 பெண்களை இரவு நேரம் கருதி பெண்கள் காப்பகத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்... மேலும், பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த 2 பேர், கஸ்டமர்கள் 4 பேர் என அனைவரும் கைதாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications