ஓட்டு போடுறதை விட ஜோதிகாவுக்கு நேபாள டூர் ரொம்ப முக்கியமா? நெட்டிசன்கள் கேள்வி
சென்னை: நடிகை ஜோதிகாவுக்கு சென்னையில் வாக்களிக்கும் உரிமை இருந்தும் அவர் இந்த முறை வாக்களிக்காமல் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். ஊருக்கு மட்டும்தான் உபதேசம் எல்லாமா?
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று முன் தினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் வாக்களிக்க காலை முதலே பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை செலுத்தினர்.

இந்த முறை தமிழகத்தில் 69 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியிருந்தன. பல்வேறு நடிகர் நடிகைகளை தங்களின் படப்பிடிப்பை கூட ரத்து செய்துவிட்டு ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.
நடிகர் அஜித் அன்றைய தினம் காலை 6.30 மணிக்கெல்லாம் வந்து அரை மணி நேரம் காத்திருந்தார். காலை 7 மணி ஆனதும் அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அது போல் நடிகர் விஜய் கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்தார். அவர் வாக்களிக்க வருவதாக இருந்த நிலையில் கனமழை கொட்டியதால் விமானங்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டன.
இதனால் அவரால் தமிழகத்திற்கு வர முடியாது, வாக்களிக்க முடியாது என கருதப்பட்டது. ஆனால் அன்றைய தினம் மழையின் தாக்கம் துபாயில் குறைந்ததால் விமானங்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் விஜய் சென்னை வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

அது போல் நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, கமல்ஹாசன், சரத்குமார், விக்ரம், பிரபு, கார்த்திக், கவுதம் கார்த்திக், சிவகார்த்திகேயன், நடிகைகள் ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், குஷ்பு, அவருடைய மகள்கள், கணவர் சுந்தர் சி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இது போல் நடிகர் சூர்யா, அவருடைய சகோதரர் கார்த்தி ஆகியோரும் வாக்களிக்க வந்தனர். அப்போது ஜோதிகா வரவில்லை, செய்தியாளர்களை சந்தித்த போது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன். மற்றவர்களும் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என்றார். அப்போது செய்தியாளர்கள் "ஜோதிகா மேடம் வாக்களிக்க வரவில்லையா" என கேட்டனர்.
ஆனால் சூர்யா, அந்த கேள்விக்கு எந்த பதிலையும் அளிக்காமல் அவர் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். இதனால் ஜோதிகா ஏதாவது படப்பிடிப்பில் இருந்திருப்பார். அதனால் அவர் வர முடியாத சூழல் உண்டாகியிருக்கும் என மக்கள் சமாதானப்படுத்திக் கொண்ட நிலையில் இன்ஸ்டா பேஜில் ஜோதிகா ஒரு குண்டை தூக்கி போட்டார்.
அதாவது நேபாளுக்கு சுற்றுலா சென்றுள்ளை வீடியோவாக போட்டுள்ளார். இதனால்தான் அவர் வாக்களிக்க வரவில்லை என தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்திய குடிமகளாக இருந்துக் கொண்டு வாக்களிப்பதை விட டூர்தான் முக்கியமா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜனநாயக கடமையாற்றுங்கள் என ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு சூர்யா வீட்டிலேயே இப்படி ஒருவர் ஓட்டு போடாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. ஒரு வேளை நேபாளம் செல்ல முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டை புக் செய்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை. மேலும் அவர் தபால் வாக்குகளையாவது அளித்தாரா என்பதும் தெரியவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications