எம்ஜிஆரால் அமெரிக்காவில் அசிங்கப்பட்ட கே.பாக்யராஜ்! இதென்ன புது கதையா இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்ஜிஆருக்கு உடல்நிலை சரியில்லை என அமெரிக்காவில் சிகிச்சை பெற சென்ற போது அங்கு நடந்தது குறித்து அவருடைய அரசியல் வாரிசு என அழைக்கப்பட்ட கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் கே.பாக்யராஜ் ஒரு நிகழ்வில் பேசுகையில், புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு உடம்பு சரியில்லை, அவர் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிட்டாரு! அவரை போய் பார்க்க வேண்டும் என நினைத்தேன். தேவைப்பட்டால் தேர்தலுக்கு போகலாம்னு நான் அமெரிக்காவுக்கு போயிட்டு வந்தேன்.

k bhagyaraj admk jayalalitha

இங்கிருந்து நான் செலவு செய்து 4, 5 பேரை கூட்டிக் கொண்டு சென்றேன். நிறைய பேர் என்னை கட்சி அனுப்பியது, ஆர்.எம்.வீரப்பன் அனுப்பினாருனு சொன்னாங்க, நான்தான் செலவு செய்துகிட்டு சென்றேன். முடிந்தால் எம்ஜிஆரை பார்க்கலாம்.

சுற்றி பார்க்க

இல்லாவிட்டால் 4, 5 நாள் சுற்றி பார்த்துவிட்டு வரலாம்னு இருந்தேன். ஒரு வேளை நீ ஏன் எனக்காக பேசலைனு கேட்டுவிட்டால் என்ன செய்வது என எனக்கு தோன்றியது. நான் அவரை பார்க்க சென்றதில் ஜானகி அம்மாவுக்கே இஷ்டம் இல்லை. என்னை பார்க்கவே விடலை! ஆர்எம்வீ கிட்ட இருந்து போன் வந்துவிட்டது.

ஜானகி அம்மா விரும்பலை

அம்மா நான் திரும்பி போய்டுவேன். ஆனால் பாக்கியராஜ்கிட்ட பத்திரிகைகாரங்க கேட்பாங்க, இல்லை நான் பார்க்கலைனு சொன்னால், பாக்கியராஜ் போயே பார்க்கலைன்னா எம்ஜிஆர் கன்பார்ம்டா இல்லை என்றாகி போகும். தோற்றத்துக்கு நான் காரணமாகிவிடும். அதனால நான் அமெரிக்காவை விட்டு போகலை, நான் அமெரிக்காவிலேயே இருந்துடறேனு சொல்லிட்டு வந்துட்டேன்.

நான் என்ன சொல்றது?

அப்புறம் ஜனங்ககிட்ட போய் அவங்க நம்புறமாதிரி கரெக்டா சொல்லணுமே என நினைத்து, நான் போய் பார்த்தேன், பால் குடித்தாரு, என்னை உட்கார சொன்னாரு, பேசறதுக்கு சிரமப்படுறாரு அப்படினு நான் சொன்ன போது ஜனங்களுக்கு நம்பிக்கை வரணுங்கிறதுக்காக என்னையே அறியாமல் எனக்கு அப்போதுதான் குழந்தை பிறந்தது, அந்த குழந்தை மீது சத்தியம் வைத்தேன்.

மட்டமான அரசியல்வாதி

அப்போது கூட்டத்தில் இருந்து வந்த ஒருவன், கையை கொடுத்து அண்ணே ஜனங்க நம்பிட்டாங்க, சூப்பர்! உங்கள் குழந்தை மேலே சத்தியம் வச்சீங்கல்ல ஜனங்க நம்பிட்டாங்கனு சொன்னான். அப்ப இவன் எந்த அளவுக்கு மட்டமான ஒரு அரசியல்வாதியா ஆயிட்டானு நினைத்து பார்க்கும் போது அன்றே இந்த அரசியல் மேல எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டம், அதனால்தான் ஒதுங்கிட்டேன்.

நெருப்பு சுடும்

அதுக்கப்புறம், நிறைய பேர் என்னை ஜெயலலிதா முன்பு வந்து கட்சியில் சேருங்கன்னு சொன்னாங்க. அதற்கு நான் யப்பா நெருப்பு ரொம்ப பக்கத்துல போனாலும் சுட்டுடும் ரொம்ப தூரமாக இருந்தாலும் அந்த கதகதப்பு இருக்காது. அதனால் நான் இப்படியே இருப்பது பெட்டர் என சொன்னேன். அதற்கு அவர்கள் உங்களுக்கு கிடைக்கிற மரியாதையே வேற நீங்க வாங்கன்னாங்க. நான் வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டேன்.

சூடம் ஏத்துறாங்க

எனக்கு நல்லா தெரியும். டெய்லியும் டிவியில் பார்க்கிறோம்ல, அந்தம்மாவை பார்த்ததும் இரண்டு கைகளை மேலே தூக்கி கும்பிடுறாங்க, அந்த அம்மா அங்க இருக்கும் போது இங்க இருந்து காலில் விழுகிறார்கள். ஒருத்தன் சூடம் கொளுத்துறான்.

அதிமுகவில் சேராதது ஏன்?

நான் மட்டும் அதிமுகவில் சேர்ந்திருந்தால், அந்தம்மா வரும் போது எல்லாரும் காலில் விழுந்திருப்பாங்க, நான் மட்டும் நின்றிருப்பேன். அவங்களுக்கு கடுப்பாகாது. அதனால் அதிமுகவில் இணைய மாட்டேன் என கூறிவிட்டு போகவே இல்லை. இவ்வாறு பாக்கியராஜ் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+