ஆஹா.. ஏகப்பட்ட மேட்டர் இருக்கும் போலிருக்கே.. கமல் போட்ட ஸ்கெட்ச்.. திணறடிக்கும் "தெற்கு"..!
கமல்ஹாசன் கோவை தெற்கில் போட்டியிட காரணம் என்ன என்ற ஆவல் எழுகிறது
சென்னை: கமலுக்கு கோவை தெற்கில் வெற்றி வாய்ப்புகள் பளிச்செனெ இருக்கின்றன என்ற பிளஸ் தகவல்கள் வருகின்றன.. அதேசமயம், கமல் ஏன் இந்த தொகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சந்தேகமும் தீராமல் உள்ளது.
இந்த முறை கமலின் தேர்தல் வருகை பிரம்மிக்கத்தக்கது.. தவிர்க்க முடியாத தலைவராக கருதப்பட்டு வருகிறார்.. சென்றை முறையே எம்பி தேர்தலில் போட்டியிடாதது பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், இந்த முறை கமல் போட்டியிட முடிவெடுத்தார்.
அதனால் எப்படியும் பரமக்குடி, மதுரை தொகுதிகளில் போட்டியிடுவார் என்று கணிக்கப்பட்டது.. பிறகு மயிலாப்பூரில் போட்டியிடுவார் என்றார்கள்.. பிறகு ஆலந்தூரில் போட்டியிடுவார் என்றார்கள்.. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் கோவை தெற்கு தொகுதியை குறி வைத்தார்.

திமுக சர்வே
இதற்கு என்ன காரணம் என்று உடனடியாக யாருக்கும் புரியவில்லை.. ஆனால் 2 மாசத்துக்கு முன்பு கமல் பிரச்சாரம் செய்யும்போது, இந்த கோவை பகுதிதான் அவரது அரசியல் வளர்ச்சியை புரிய வைத்தது.. மக்கள் திரண்டு வந்து கமல் பேச்சை கேட்டனர்.. இந்த கூட்டத்தைதான் திமுகவும் கவனித்தது.. கமலுக்கு எப்படி வாக்கு வங்கி உள்ளது என்ற ஒரு சர்வேயும் எடுக்கப்பட்டதாக சொன்னார்கள். இந்நிலையில் கமல் தெற்கு பகுதியில் அடியெடுத்து வைத்துள்ளார். இதற்கு ஒரு சென்டிமென்ட்டும் இருப்பதாக கூறுகிறார்கள்.

திமுக சர்வே
இதற்கு என்ன காரணம் என்று உடனடியாக யாருக்கும் புரியவில்லை.. ஆனால் 2 மாசத்துக்கு முன்பு கமல் பிரச்சாரம் செய்யும்போது, இந்த கோவை பகுதிதான் அவரது அரசியல் வளர்ச்சியை புரிய வைத்தது.. மக்கள் திரண்டு வந்து கமல் பேச்சை கேட்டனர்.. இந்த கூட்டத்தைதான் திமுகவும் கவனித்தது.. கமலுக்கு எப்படி வாக்கு வங்கி உள்ளது என்ற ஒரு சர்வேயும் எடுக்கப்பட்டதாக சொன்னார்கள். இந்நிலையில் கமல் தெற்கு பகுதியில் அடியெடுத்து வைத்துள்ளார். இதற்கு ஒரு சென்டிமென்ட்டும் இருப்பதாக கூறுகிறார்கள்.

டாக்டர் மகேந்திரன்
கடந்த முறை, எம்பி தேர்தலில், வாக்காளர்களை அறிமுகப்படுத்தியது இந்தகோவையில்தான்.. இதே தொகுதியில்தான் டாக்டர் மகேந்திரனுக்கு இங்கு சீட் தந்தார்கள்... அவர்தான் 1,45,104 வாக்குகளை பெற்றிருந்தார்.. அதாவது கொங்குவை தன் கைப்பிடியில் வைத்திருந்த அதிமுக ஒன்றிலும் இப்படி வாக்கை பெறவில்லை.. மொத்த கொங்குவையும் மய்யமே ஆக்கிரமித்து இருந்தது.. அதனாலயே இந்த முறையும் கொங்குவை குறி வைத்துள்ளார் கமல்... இதைதவிர சாதீய ஓட்டுக்கள் இங்கு அவருக்கு உள்ளன.,.

கவர்ச்சி தலைவர்
இதே சாதீய ஓட்டுக்களை நம்பிதான் பாஜகவும் இருக்கிறது.. இதைதவிர இந்து அமைப்புகள் வாக்குகளும் இங்கு ஓரளவு உள்ளன.. இதெல்லாம் கமலுக்கு சாதகமாக இருந்தாலும்கூட, வடமாநில மக்கள் இங்கு அதிகமாக வசிக்க தொடங்கிவிட்டனர்.. தடுக்கி விழுந்தால் வடமாநில தொழிலாளர்கள்தான் இருக்கிறார்கள்.. இவர்களுக்கு திராவிட கட்சிகளின் பாரம்பரியம் தெரியாதநிலையில், கமல் என்ற நடிகர் மட்டுமே கவர்ச்சி அரசியல் தலைவராக தென்படுகிறார்.. எனவே, இவர்களின் கணிசமான வாக்குகளும் கமலை நோக்கியே போகும் என தெரிகிறது.

மேல்தட்டு மக்கள்
இது எல்லாவற்றிற்கும் மேலாக, படித்தவர்கள் நிறைந்துள்ள தொழில் பகுதிதான் கோவை தொகுதி.. தொழிற்சாலைகள் அதிகம்.. படித்தவர்களும் அதிகம்.. கமலை கடந்த முறை தூக்கிவிட்டதே படித்த மேல்தட்டு மக்கள்தான்.. அதனால் இவர்களின் வாக்கும் கமலுக்கு சாதகமாக இருப்பதாக சொல்கிறார்கள். இதையெல்லாமம் கணக்கு போட்டே கமல், தெற்குவை வாரி சுருட்ட களத்தில் குதித்துள்ளார்.. இது கடைசி நேரத்தில் எடுத்த "பொலிட்டிக்கல் ஸ்ட்ராடர்ஜி" என்கிறார்கள்.

கூட்டணி
ஆனாலும், கமலின் கூட்டணி சற்று பலவீனமாகதாகவே உள்ளதாக கருதப்படுகிறது.. சிறிய கட்சிகளை கொண்டு கூட்டணி அமைத்தால், அதன் தாக்கம் பெரிய அளவுக்கு தேர்தலில் எதிரொலிக்காது, இன்னும் சொல்லப்போனால், ஏற்கனவே உள்ள வாக்கு வங்கியை இது அசைத்து பார்த்துவிடக்கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து சொல்கிறார்கள்.. எனினும் இதையெல்லாம் மீறி கமல் தெற்குவை கைப்பற்றுவாரா? பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications