முக்கிய சீனியர்களை கழற்றிவிட்ட எடப்பாடி.. ‘அப்செட்’ ஆன தலைகள்.. ஆளுநர் மாளிகை முன்பே புகைச்சல்!
சென்னை : ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணியாகச் சென்ற எடப்பாடி பழனிசாமி, சீனியர்கள் சிலரோடு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார். இந்த மீட்டிங்கின்போது தங்களை அழைத்துச் செல்லவில்லை என முக்கியமான சீனியர்கள் பலர் கடுமையான அப்செட்டில் இருக்கிறார்களாம். பேரணியின்போதே சிலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து புகார் மனு அளித்தார். சட்டம் ஒழுங்கு பாதிப்பு, கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளதாக அதிமுக சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதன்படி எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் சென்னை, சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று பேரணியாகச் சென்றனர். இந்த பேரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆளுநர் மாளிகைக்கு முன்பாகவே அதிமுக பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தன்னுடன் மூத்த நிர்வாகிகள் சிலரை மட்டும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்று, மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் கள்ளச்சாராயம் மரணம், போலி மதுபானம், திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆளுநர் ரவியிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பாலகங்கா, திருவள்ளூர் மா.செ பெஞ்சமின், ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆளுநரைச் சந்திக்க தங்களை அழைத்துச் செல்லாததால் சீனியர்கள் பலர் எடப்பாடி மீது கடுமையான அப்செட்டில் உள்ளனராம். குறிப்பாக, அதிமுக எம்.பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, செம்மலை, காமராஜ், விஜயபாஸ்கர் போன்றோர் தங்களை எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லாததால் அப்செட் ஆகியுள்ளனராம்.

தம்பிதுரை, டெல்லியில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்குவதற்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டவர், தேர்தல் ஆணையம், மத்திய அரசு துறைகளின் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்ததற்கு, டெல்லியில் தம்பிதுரை செய்த லாபி முக்கியமானது. நேற்று பேரணியில் கலந்துகொண்ட தம்பிதுரை, ஈபிஎஸ் தன்னை ஆளுநரை சந்திக்கும்போது அழைத்துச் செல்லவில்லை என செம அப்செட்டாம்.
இதேபோல, ஆர்பி உதயகுமாரும் தன்னை எடப்பாடி ஓரங்கட்டுவதாக நினைக்கிறாராம். ஓபிஎஸ்ஸுக்கு மாற்றான முகமாக தென் மாவட்டத்தில் தன்னை முன்னிறுத்தி வந்த எடப்பாடி பழனிசாமி சமீபமாக தன்னை ஓரங்கட்டுகிறாரோ என்ற எண்ணம் ஆர்பி உதயகுமாருக்கு ஏற்பட்டுள்ளதாம். முன்பு ஆளுநரைச் சந்தித்தபோதும் அழைத்துச் செல்லவில்லை, இப்போதும் அழைத்துச் செல்லவில்லை என்பதால் அப்படியே ஒதுங்கிவிட்டாராம்.
இதேபோல, முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளனராம். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தன்னை ஈபிஎஸ் அழைத்துச் செல்லவில்லை என்ற அதிருப்தியை பேரணியின்போதே வெளிப்படுத்தி விட்டாராம். அதேபோல, முக்கிய பெண் நிர்வாகிகளான கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோரும் தங்களுக்கு முக்கியத்துவமே தரப்படுவதில்லை என ஆதங்கத்தில் இருக்கிறார்களாம்.
ஆக மொத்தம், வலிமையான எதிர்க்கட்சித் தலைவராக தன்னை நிலைநிறுத்தும் வகையில் ஈபிஎஸ் மேற்கொண்ட இந்த ஆளுநர் சந்திப்பு முயற்சி, கட்சிக்குள்ளேயே பல்வேறு புகைச்சல்களைக் கிளப்பியுள்ளது. சீனியர்களின் இந்த அதிருப்திகளை எடப்பாடி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்!












Click it and Unblock the Notifications