குஷ்பு கைது செய்யப்பட்டது ஏன்? ... அமைச்சர் ஜெயகுமார் கொடுத்த விளக்கம் இதுதான்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே குஷ்பு கைது செய்யப்பட்டார் என்று அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளித்துள்ளார். பாஜக மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களைப் பற்றி இழிவாக பேசினார் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீதான குற்றச்சாட்டு. திருமாவளவன் கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். மாநிலம் முழுவதும் திருமாவளவனுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

Why Khushbu arrested? Minister Jayakumar explanation

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

சிதம்பரத்தில் பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி சிதம்பரத்திற்கு காரில் கிளம்பினார் நடிகை குஷ்பு. அவரை முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்திய போலீசார் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக குஷ்புவை கைது செய்தனர். குஷ்புவை வேனில் ஏற்றிய கேளம்பாக்கம் தனியார் விடுதியில் தங்க வைத்தனர். அங்கு சென்ற விடுதலை சிறுத்தைககள் கட்சி நிர்வாகிகள் குஷ்புவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

குஷ்பு கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என்று கூறினார் பாஜக மாநில தலைவர் எல். முருகன். இந்த நிலையில், குஷ்பு கைது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே குஷ்பு கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

திருமாவளவன் மீது கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும். மேலும் பாஜக மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+