Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறியதாலேயே வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து: ரவிக்குமார் எம்.பி. விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடஒதுக்கீடு வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை மீறியதாலேயே வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு -எம்.பி.சி.யில் உள்ள வன்னியர்களுக்கு மொத்தம் உள்ள 20% இடஒதுக்கீட்டில் 10.5% உள் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. 68 ஜாதிகளை உள்ளடக்கிய சீர்மரபினருக்கு 7%; எஞ்சிய 22 ஜாதியினருக்கு 2.5% இடஒதுக்கீடு என முந்தைய அரசு சட்டம் கொண்டு வந்தது.

வன்னியர் இடஒதுக்கீடு ரத்து

வன்னியர் இடஒதுக்கீடு ரத்து

தற்போதைய திமுக அரசும் இதனை ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்த வன்னியர் உள்இடஒதுக்கீடு பாரபட்சமானது என்பதால் ரத்து செய்யக் கோரி 25 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை மதுரை உயர்நீதிமன்ற கிளை சிறப்பு வழக்காக விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில், வன்னியருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்குவிரோதமானது என்பதால் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

ரவிக்குமார் எம்.பி.

ரவிக்குமார் எம்.பி.

இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரவிக்குமார் எம்.பி. தமது சமூக வலைதளப் பக்கத்தில் வன்னியர் உள்இடஒதுக்கீடு ரத்து ஏன் என்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில் ரவிக்குமார் கூறியிருப்பதாவது: முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீடு செல்லுபடியாகும்போது, அருந்ததியர் உள் ஒதுக்கீட்டில் சிக்கல் இல்லாதபோது வன்னியர் உள் ஒதுக்கீடு மட்டும் ரத்து செய்யப்பட்டது ஏன்? என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்பில் (பக்கம் 178 பத்தி 83 ) அதற்கான காரணம் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஆணைய தரவுகள்

ஆணைய தரவுகள்

"முஸ்லீம்கள் மற்றும் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை, ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில், அவர்களது பின் தங்கிய நிலையும், போதிய பிரதிநிதித்துவம் இல்லையென்பதும் கண்டறியப்பட்டு, முறையாகக் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தன்னிச்சையாகச் செயல்படுவதற்கும், 115 சாதிகளுக்குக் கிடைத்த உரிமைகளைப் பறிப்பதற்கும் எந்த அதிகாரத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசுக்கு வழங்கவில்லை. மேலும் எம்.நாகராஜ் வழக்கில் மூன்று அளவுருக்களிலும் நேரடியாக அரசின் கையிலோ அல்லது ஆணையத்திடமோ தரவுகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் சாசனம் பின்பற்றப்படவில்லை

அரசியல் சாசனம் பின்பற்றப்படவில்லை

இந்த வழக்கைப் பொருத்தமட்டில் 1994 ஆம் ஆண்டின் சட்டம்45 பிரிவு 7 இன் படி ஆணையத்தின் அறிக்கையின் மூலம் அந்தத் தரவுகள் பெறப்பட வேண்டும். இந்த சட்டத்தை 2021 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தபோது உச்சநீதிமன்றம் கூறியதோ, அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதோ எதுவும் பின்பற்றப்படவில்லை. இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+