Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணத்திற்கு பிறகு ஏன் கள்ள உறவு? சென்னை உள்ளிட்ட நகர தம்பதிகள் சொன்ன டாப் 10 காரணங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் முடிந்த பின்பு தம்பதிகள் வேறு ஆணுடனோ பெண்ணுடனோ ரகசிய உறவு ஏன் வைத்துக்கொள்கின்றனர் என்பதற்கான காரணங்களை கிளீடன் ஆப் வெளியிட்டுள்ளது.

தற்போதைய கால கட்டத்தில் கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்தில் கருத்து வேறுபாடாக தொடங்கும் இந்த பிரச்சினை நாளடைவில் விவாகரத்தில் முடிகிறது.

இதன் காரணமாக முன்பைவிட விவாகரத்து வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

 ரகசிய உறவு

ரகசிய உறவு

கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது, போதிய நேரமின்மை, தங்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேளாது என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இத்தகைய போக்கு மாற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதேபோல் ஒருசிலர் திருமணமான கணவர்கள் தனது மனைவிக்கு தெரியாமல் வேறு பெண்ணுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, உறவு வைத்துக்கொள்வதும், இதேபொல் திருமணமான பெண் வேறு ஒரு நபருடன் ரகசியமாக உறவு வைத்துக்கொள்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

 முதல் 3 காரணங்கள்

முதல் 3 காரணங்கள்

இந்த நிலையில், சென்னை போன்ற பெரு நகரங்களில் திருமணமான தம்பதிகள் அதிகம் ஏமாற்றப்படுவதற்கான அல்லது ஏமாறுவதற்கான 10 காரணங்களை பிரபல டேட்டிங் செயலியான கிளீடன் வெளியிட்டுள்ளது. இதில், சலிப்பு, போதிய அளவு தகவல்களை தம்பதிகள் பரிமாறிக்கொள்ளாதது, ஒப்புக்கு பேசுவது ஆகியவையே முதல் 3 காரணங்களாக பட்டியலிட்டுள்ளது. நாட்டின் முதல் தர நகரங்களான மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களில் திருமணத்தை தாண்டி பிற நபர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் டேட்டிங் செயலியை பயன்படுத்துபவர்களில் சுமார் 10 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்கள் எல்லாம் 35 முதல் 45 வயது வரம்புக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

 பாலியல் ரீதியான உறவு

பாலியல் ரீதியான உறவு

கிளீடன் செயலியின் மேலாளர் சிபில் ஷிட்டெல் இந்த ஆய்வு முடிவுகள் பற்றி கூறும் போது, "திருமணத்தை தாண்டி வேறு நபர்களுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்வது உலகம் முழுவதும் தவறான செயலாகவே கருதப்படுகிறது. ஆனாலும் இதில் பல விஷயங்கள் உள்ளன. தம்பதிகள் பிற நபர்கள் பாலியல் தேவைக்காக நாடிச்செல்வதற்கு ஏமாற்றுதல் அல்லது ஏமாற்ற போவது ஆகியவை மட்டுமே காரணங்களாக இல்லை. இதைத் தாண்டி தம்பதிகள் இடையே போதிய அக்கறையின்மை அதாவது அலட்சியமாக செயல்படுதல், குடும்ப சண்டை, தனிமையாக உணர்தல் உள்ளிட்ட வேறு பல காரணங்களும் உள்ளன.

 என்னென்ன காரணங்கள்

என்னென்ன காரணங்கள்

இதில் முதன்மையான காரணங்கள் என்னவென்றால், சலிப்பாக உணர்தல், அதிகம் பேசிக்கொள்ளாதது, தங்களுக்குள் உள்ள தகவல்களை சரியாக பகிர்ந்து கொள்ளாதது, அதீத எதிர்பார்ப்பு , கடந்த கால உறவுகள் ( தங்கள் முன்பு தொடர்பில் இருந்த நபர்களோடு தனது துணையை ஒப்பிட்டு பார்ப்பது) பல துணைகளோடு வாழும் நபர்களை ஏற்றுக்கொள்வது, குடும்பத்திற்குள் ஏற்படும் பிரச்சினை, செக்ஸ்க்கு அடிமையாவது" ஆகியவை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+