அருணாச்சலம் இப்படி பண்ணிட்டாரே.. கமல் "ரகசியம்" எல்லாம் போய்ருமே.. பாஜக ஆபரேஷன் சக்சஸ்..!
மநீம அருணாசலம் பாஜகவில் இணைந்தது என்ன காரணம்?
சென்னை: தேர்தல் நெருங்கும் சமயத்தில், மநீம அருணாசலம் பாஜகவில் தாவி உள்ளார்.. இதற்கு என்ன காரணம்? யார் காரணம்?
சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. சென்ற முறை எம்பி தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும், இந்த முறை கமல்ஹாசனே நேரடியாக போட்டியிடப் போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதனால், அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.
கமல், தனது பிரச்சாரங்களில் செல்லும் இடமெல்லாம் எம்ஜிஆரை துணைக்கு அழைத்து சென்று கொண்டு இருந்தால், மற்றொரு பக்கம் அவருக்கே தெரியாமல் ஒரு கருப்பு உள்ளே இவ்வளவு நாள் இருந்துள்ளது.

அதிர்ச்சி
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம் இன்று திடீரென பாஜகவில் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக, தேர்தல் வந்துவிட்டாலே ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சி தாவும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இயல்புதான் என்றாலும், அது கமல் கட்சியிலும் நடக்குமா என்பதுதான் சந்தேகமாக இருந்தது.

திமுக
காரணம், அதிமுக, திமுகவில் மட்டும்தான் இந்த கட்சிதாவல்கள் அதிகமாக நிகழும்.. இப்போது கமல் கட்சியிலேயே நடந்துள்ளது என்றால், மய்யம் உண்மையிலேயே வளர்ந்துள்ளது என்றே இதற்கு பொருள். மற்றொரு விஷயம், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, நாளை பாஜகவில் மாற்றுக்கட்சியை சேர்ந்த மிக முக்கிய தலைவர் இணைகிறார் என்று கூறியிருந்தார்.. அதன்படியே ஒருவர் இணைந்தும் உள்ளார் என்றால், பாஜக தன் விஷயத்தில் சரியாகவே உள்ளது.

ஐக்கியம்
அதிலும் முருகன் வந்ததில் இருந்தே, மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அதிகமாக பாஜகவில் ஐக்கியமாகி வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.. தேர்தல் சமயத்தில் சமயோஜிதமாகவும், பக்காவாகவும் ஸ்கெட்ச் போட்டு தமிழக பாஜக வேலை பார்த்து வருகிறது என்பதை மற்ற கட்சிகளும் உணர்ந்து சுதாரிக்க வேண்டிய தருணம் இது... குஷ்பு விஷயத்திலேயே சுதாரித்திருக்க வேண்டும்.

விரோதம்
"கமலிடம் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளிக்க கேட்டேன் அதற்கு மறுத்தார். விவசாயிகளுக்கு விரோதமான போராட்டத்தில் கலந்து கொண்டார். எதையும் ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை. வேளாண் திருத்த சட்டத்தை ஆதரிக்க சொல்லியும், கமல் அதனை கண்டுகொள்ளவில்லை.. அதனால், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறி பாஜகவில் தொண்டனாக தன்னை இணைத்து கொண்டேன்' என்று அருணாசலம் ஒரு காரணம் சொல்லி உள்ளார்.

பொதுச்செயலாளர்
கட்சி தாவலில் இறங்குபவர்கள் ஏதோ ஒரு காரணம் சொல்லி இணைவது போலவே, இந்த காரணமும் பரவலாக எடுத்துக் கொள்ளப்படும் என்றாலும், மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்க அடித்தளமிட்ட நாள் முதல் கமல்ஹாசன் அருகில் இருந்தவர், நிறுவன பொதுச்செயலாளராக செயலாற்றி வந்தவர், எல்லாம் சுமூகமாக போய்க் கொண்டிருந்த சூழலில் திடீரென சொந்த கட்சியிலேயே அதிருப்தி ஏற்பட்டது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது...

சந்தேகம்
தேர்தல் நெருங்கும் சூழலில் முக்கிய நிர்வாகி ஒருவர் தேசிய கட்சிக்கு தாவுவது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகிறது... ஒருவேளை இது உட்கட்சி பூசலா? மய்யத்தின் பின்னடைவா? என்று தெரியவில்லை.. ஒரு முக்கிய நிர்வாகியே விலகி இருக்கும்போது, இதை காரணம் காட்டி மற்ற கட்சிகள் இதையே தங்கள் பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் வாய்ப்பாக அமைந்து விடக்கூடும்.

அதிர்ச்சி
அதுமட்டுமல்ல, கமலுக்கே இது மைனஸ்தான்.. அதிர்ச்சிதான்.. கமலின் அரசியல் பயண திட்டங்களை அறிந்தவர் இவரே.. கமல் எடுக்கப்போகும் அதிரடிகளின் ரகசியங்களை அறிந்தவரும் இவரே.. இதுதான் ஒரே கலக்கமாக இப்போது எழுந்துள்ளது.. சென்ற முறை எம்பி தேர்தலின்போது, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வியூகம் வகுக்கும் குழுவின் தலைமை பொறுப்பில் இருந்தவர் அருணாச்சலம்தான் என்பதால், கமலுக்கு கொஞ்சம் சிக்கல் எழுந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications