நாளை சந்திர கிரகணம்.. சென்னையில் தெரியுமா? சிகப்பு பந்து போல் நிலா காட்சியளிப்பது ஏன்?
சென்னை: சந்திர கிரகணத்தின் போது நிலவானது ஏன் சிவப்பு நிறத்தினாலான பந்து போல் காட்சியளிக்கிறது தெரியுமா?
சந்திர கிரகணம், சூரிய கிரகணம் என்பது ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் வானியல் நிகழ்வாகும். இந்த இரு நிகழ்வுகளின் போது கோயில்கள் திறக்கப்படாது, வீடு வாசல்களை மக்கள் துடைத்து பூஜை சாமான்களை தேய்த்து புதிதாக பூஜை செய்வர்.
அறிவியலை பொருத்தமட்டிஸ் சந்திரகிரகணம் என்பது பூமியின் நிழல் நிலவின் மீது விழும் போது ஏற்படுவது ஆகும். பூமியின் நிழல் கருமையான நிழலானது நிலவின மீது மொத்தமாக விழுவதுதான் முழு சந்திரகிரகணம் என அழைப்போம்.

சந்திர கிரகணம்
சந்திர கிரகணத்தின் போது முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். அப்போது சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும். கடந்த 25 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்வு நடந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை செவ்வாய்க்கிழமை முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

முழு சந்திர கிரகணம்
இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க இயலாது. சந்திரன் உதயமாவதற்கு முன்பே அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும். இந்தியாவின் கிழக்கு பகுதிக்குச் செல்ல செல்ல சந்திர கிரகணத்தை பார்க்க இயலும். இந்த பகுதிகளில் சந்திர கிரகணம் பொதுவாக எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் ஏற்படும். தமிழகத்தில் சென்னையில் சந்திரன் இந்திய நேரப்படி 5 மணி 39 நிமிடங்கள் உதிக்கும்.

40 நிமிடங்கள் நீடிக்கும்
சந்திர கிரகணத்தை 40 நிமிடங்கள் காணலாம். சந்திர கிரகணம் நாளை மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. கரு நிழல் விழுவது 2.38 மணிக்கும் முழு சந்திர கிரகணம் தொடங்குவது பிற்பகல் 3.45 மணிக்கும் முழு கிரகணம் ஏற்படும் நேரம் 4.18 மணிக்கும் முழு சந்திர கிரகணம் முடியும் நேரம் மாலை 5.11 மணிக்கும் கிரகணம் முடியும் நரம் இரவு 7.27 மணியாகும்.

நிறங்கள்
கிரகணம் ஏற்படும் போது நிலவு ஏன் சிவப்பாக மாறுகிறது என்பதை பார்ப்போம். வெள்ளை ஒளிக்குள் 7 நிறங்கள் இருக்கிறது. அதாவது VIBGYOR என குறிப்பிடுவோம். ஊதா, அக சிகப்பு, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிகப்பு ஆகிய நிறங்களாகும். இதில் நீல நிறமானது பூமியின் வளிமண்டலத்தில் ஒளிச் சிதறல் அடைகிறது. இதன் காரணமாக வானம் நீல நிறமாக இருக்கிறது.

சிவப்பு நிறப்பு
அதே போல ஒளியானது வளிமண்டலத்தின் வழியே செல்லும் போது சிவப்பு நிறமானது ஒளி விலகல் அடைந்து அது நிலவின் மீது படுகிறது. இதனால்தான் நிலவானது கிரகணத்தின் போது சிவப்பு நிறமாக காணப்படுகிறது. சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். சிறப்பு உபகரணங்கள் ஏதும் தேவையில்லை. இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் அடுத்து ஆண்டு 2023 அக்டோபர் 23 தேதியாகும்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications