சூப்பர் டூப்பர் ஹிட் பாடலுக்காக! சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு சென்ற தேவா! பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு சூப்பர் ஹிட் கானா பாடலுக்காக இசையமைப்பாளர் தேவா, சிறைக்கே சென்றாராம். அந்த பாடல் என்ன, அவர் சிறை சென்ற பின்னணி என்பதை தெரிந்து கொள்ளலாம். எதற்காக தேவா, அத்தனை ரிஸ்க் எடுத்தார்?

Deva

கானா பாடல்கள் என்றாலே நமது நினைவுக்கு வருவது தேவாதான். ஆனால் அந்த தேவாவால் மென்மையான பாடலையும் கொடுக்க முடியும் என்பதற்கு சாட்சி, அண்ணாமலை படத்தில் வந்த ஒரு பெண் புறா பாடல்!

கானா என்ற ஒரு இசையை வெளியே கொண்டு வந்தவரும் அவர்தான். அவரது வரவால்தான் தற்போது நிறைய கானா பாடகர்கள் முளைத்திருக்கிறார்கள். "தேனிசைத் தென்றல்" தேவா என அன்போடு அழைக்கப்படும் அவர் ஒரு ஹிட் பாடலுக்காக சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்கே சென்றாராம்.

சிறை சென்ற தேவா

அவர் எதற்காக சிறை சென்றார், அங்கு நடந்தது என்ன என்பதை பார்க்கலாம். "இந்து" படத்தில் இடம்பெற்ற "வா முனிமா" என்ற பாடல்தான். இந்த படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்திருந்தார். இதை பாடியது மனோ! ஆனால் தேவாவின் மனதில் இந்த பாடலை கானா பழனியப்பன் பாட வேண்டும் என இருந்ததாம்.

சென்ட்ரல் சிறையில் பாடகர்

அவரை பாட வைக்க தேடிய போது அவர் சென்னை சென்ட்ரல் சிறையில் இருந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேராக சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு சென்ற அவர் ஜெயிலரை பார்த்து, "சார் கானா பழனியப்பன் எனது இசையில் ஒரு பாடலை பாட வேண்டும். அவரை என்னுடன் அனுப்பி வைக்க என்ன சட்ட நடைமுறை என்பதை சொல்லுங்கள். சட்டத்தின்படி செல்வோம்" என்றாராம்.

கொலை குற்றவாளி

அப்போது ஜெயிலர், "சார் கானா பழனியப்பன் ஒரு கொலை குற்றவாளி, தூக்கு தண்டனை கைதி. நீங்கள் அவரை கூட்டி செல்லும்போது அவர் தப்பிவிட்டால் பெரிய பிரச்சினையாகிவிடும். உங்களுக்கும் தலைவலி" என்றாராம்.

ரிஸ்க் எடுக்க விரும்பிய தேவா

அதற்கு தேவா, "இல்லை சார் நான் பத்திரமாக அவரை கூட்டிச் சென்று உங்களிடம் ஒப்படைக்கிறேன், என்னுடன் அனுப்புங்கள்" என்றாராம். அதற்கு ஜெயிலர், "நான் ரிஸ்க் என சொல்கிறேன், நீங்கள் கேட்கமாட்டேங்கிறீங்க! சரி அழைத்து செல்லுங்கள், எந்த இடத்தில் ரெக்கார்ட்டிங், எத்தனை மணிக்கு, எப்போது அழைத்துச் செல்வீர்கள், எப்போது கூட்டி வந்து ஜெயிலுக்குள் ஒப்படைப்பீர்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்துவிட்டு கூட்டிச் செல்லுங்கள்.

கண்டிஷன் போட்ட ஜெயிலர்

ஆனால் ஒரு கன்டிஷன்! கானா பழனியப்பனை அழைத்து செல்லும் போது சரி, பாட வைக்கும் போது சரி அவர் கையில் விலங்குடன்தான் இருக்க வேண்டும், அதை கழற்றிவிடக் கூடாது என்றாராம்.

விலங்கு மாட்டியா- முடியாது என்ற தேவா

ஆனால் தேவா, "ஒரு பாடகனின் கையில் விலங்கு மாட்டியபடி என்னால் பாட வைக்க முடியாது" என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். இதையடுத்துதான் அந்த பாடலை மனோவை வைத்து பாட வைத்தாராம். அந்த பாடல் ஹிட்டடித்தது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் தேவா உண்மையிலேயே கடும் உழைப்பாளிதான் என்கிறார்கள்.

தேவா சகோதரர்களின் அர்ப்பணிப்பு

இத்தனை அர்ப்பணிப்புடன் இருந்ததுதான் தேவாவும் அவருடைய சகோதரர்களும் இசைத் துறையில் கோலோச்ச காரணம்! தேவாவின் தம்பி சபேஷ் நேற்று முன் தினம் உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இறப்பால் தேவா மீளாத் துயரில் இருந்து வரும் நிலையில் சபேஷ், தேவா குறித்து ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+