பக்ரீத் எனப்படும் ஹஜ் பெருநாள்.. ஏன் கொண்டாடப்படுகிறது? இந்த நாளில் இஸ்லாமியர்கள் என்ன செய்வார்கள்?
சென்னை: நாளை தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் பக்ரீத் எனப்படும் ஹஜ் பெருநாளை கொண்டாட இருக்கும் நிலையில், இந்த பண்டிகையை ஏன் இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர் என்ற விளக்கத்தை பார்ப்போம்.
இஸ்லாத்தில் உள்ள 5 கடமைகளை முஸ்லிம்கள் செய்ய வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. முதலாவது கலிமா எனப்படுகிறது. அதாவது அல்லாஹ்வை ஒரே இறைவனகாவும், முஹம்மது நபியை அவனது தூதராகவும் ஏற்றுக்கொள்வது. 2 வது 5 வேளை தொழுகையை நிறைவேற்றுவது.
3 வது ஜகாத் எனப்படும் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வருமானத்தில் ஒரு பகுதியை தானம் செய்வது. 4 வது ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்பது. 5 வது ஆயுளுக்கு ஒரு முறையாவது அரபு மாதமான துல் ஹஜ்ஜில் பொருளாதாரமும், உடல் நலனும் இருப்பவர்கள் மக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்வதாகும்.
இதில் 2 கடமைகளை மையப்படுத்தி இஸ்லாத்தில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று முடித்தவுடன் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை. ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் இப்பண்டிகை, ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்துவிட்டு ஷவ்வால் மாதத்தின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் ஏழைகளுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை முஸ்லிம்கள் வழங்குவது வழக்கம்.

2வது பண்டிகை என்பது இஸ்லாத்தின் 5 வது கடமையான ஹஜ்ஜை மையப்படுத்தி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் துல் ஹஜ் மாதம் பிறை 10 ல் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டிருக்கும்போது இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இறைத்தூதர் இப்ராஹிம் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக கால்நடைகளை குர்பானி கொடுத்து கறிகளை ஏழைகள், உறவினர்களுக்கு வழங்குவார்கள்.
மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்டு இருக்கும் பயணிகள் எந்த நாடு, மொழி, இனம், நிறத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் இறைவனுக்கு முன் சமம் என்பதை காட்டும் வகையில் இஹ்ராம் என்ற வெள்ளை நிற ஆடையை அணிந்துகொண்டு சடங்குகளை செய்வார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும், ஓரிரை கோட்பாட்டையும் வலியுறுத்தி இறுதி பேருரை ஆற்றிய இடமான அரஃபா மைதானத்தில் ஹஜ் பயணிகள் துல் ஹஜ் மாதம் பிறை 9ல் முகாமிடுவார்கள். அதற்கு அடுத்த நாளில் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
நோன்பு பெருநாளை பொறுத்தவரை முதல் நாள் பிறை பார்த்துவிட்டு அடுத்த நாள் பெருநாளுக்கு தயாராக வேண்டும். ஆனால், ஹஜ் பெருநாளில் அந்த சிக்கல் இல்லை. 10 நாட்களுக்கு முன்பே பெருநாள் எப்போதென்று தெரிந்துவிடும். பெருநாளுக்கு சில நாட்களுக்கு முன்பே குர்பானி கொடுக்கப்போகும் கால் நடைகளை வாங்கி வீட்டில் வளர்த்து தீனி போட்டு, மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள்.
பெருநாளுக்கு முதல் நாளே உணவு பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்வார்கள். மறுநாள் அதை சமைப்பது மட்டும்தான். வழக்கமான அதிகாலை தொழுகையை தொழுதுவிட்டு குளித்து புத்தாடை அணிந்து நறுமனங்களை பூசிக்கொள்ளும் முஸ்லிம்கள், மசூதியிலோ அல்லது திடலிலோ சென்று பெருநாள் சிறப்பு தொழுவது வழக்கம். அதன் பின்னர் அங்கு வரும் வறியவர்களுக்கு தர்மங்கள் செய்து நண்பர்கள், உறவினர்களை கட்டியணைத்து வாழ்த்துவார்கள்.
வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு பெரியவர்கள் பெருநாள் காசு என்ற பெயரில் ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அவர்களை மகிழ செய்வார்கள். வெவ்வேறு ஊர்களில் பணி நிமித்தமாக தங்கி இருப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி பெருநாள் அன்று ஒன்றாக சமைத்து சாப்பிடுவது வழக்கம். அதன் பின்னர் ஆடு, மாடுகளை பலியிட்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய உறவினர்கள், ஏழைகளுக்கு வீடு தேடி சென்று உதவுவார்கள். இப்படி ஹஜ் பெருநாள் நிறைவடையும்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications