ஆஹா.. மோடியை கூட கூப்பிடலையே.. அமைதியாக மகள் திருமணத்தை முடித்த நிர்மலா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகளுக்கு நேற்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட் பணிகளை செய்து வருகிறார். அடுத்த ஆண்டு பட்ஜெட் என்பது பாதி பட்ஜெட் ஆகும். இருப்பினில் 2024 லோக்சபா தேர்தல் வருவதால் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட அவர் முடிவு செய்துள்ளார்.

இதற்காக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான் அமைச்சரவை பணிகளுக்கு இடையில் நேற்று தனது மகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். நிர்மலா சீதாராமன், பெங்களூருவில் தன் குடும்பத்துடன் வசித்துக்கொண்டு இருக்கிறார்.
அங்குள்ள வீட்டில்தான் நேற்று நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம் நடந்தது. பொதுவாக அரசியல் தலைவர்கள் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்துவார்கள். நாடே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் திருமணத்தை நடத்துவார்கள்.
அதிலும் இந்தியாவின் நிதியையே கட்டுப்படுத்தும் நிர்மலா சீதாராமன் நினைத்து இருந்தால் மிக பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி இருக்கலாம். மோடி முதல் எடப்பாடி வரை.. அம்பானி முதல் அதானி வரை எல்லோரையும் அழைத்து திருமணத்தை நடத்தி இருக்கலாம்.
ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் மிக மிக எளிமையாக தனது வீட்டிலேயே மகள் திருமணத்தை நடத்தி உள்ளார் நிர்மலா சீதாராமன். இவரது மகள் பரகலா வாங்மயிக்கு, பிரதீக் என்பவருடன் திருமணம் நடந்தது.

பிரதீப் அரசியல் பின்புலம் இல்லாத, பிஸ்னஸ்மேன் குடும்பத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது அரசியல் நிகழ்வு இல்லை என்பதால் பிரதமர் மோடி தொடங்கி யாருமே இந்த திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை.
உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வபிரிய தீர்த்த சுவாமிகள் மற்றும் ஈசபிரிய தீர்த்த சுவாமிகள் இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். அதமாரு மடத்தின் வேதமுறைப்படி இந்த திருமணத்தை நிர்மலா சீதாராமன் நடத்தி இருக்கிறார்.
நெருங்கிய ரத்த சொந்தங்கள் மட்டுமே திருமணத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இப்படி அவர் எளிமையாக திருமணத்தை செய்தது பாராட்டுகளை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications