அப்பாவைப் பற்றி பேசாதது ஏன்? எலும்புக்கூடுபோல் மாறிய முகம்! ரஹ்மான் சொன்ன உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தையைப் பற்றி அதிகம் ஏன் பேசியதில்லை என்பது குறித்த கசப்பான உண்மைகளை முதன்முறையாக வெளியே பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதற்கான காரணம் என்ன? அதற்குள் மறைந்துள்ள விசயம் என்ன?

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு இசையமைத்ததற்காக தேசிய விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. இதுவரை 7 முறை அவர் இந்த விருதைப் பெற்றுள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் ஹாலிவுட் வரை அவர் பயணித்தாலும் இப்போதும் அவர் தனது அடக்கமான குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. ரஹ்மான், தற்போது தக் லைஃப், ஜெனி, காதலிக்க நேரமில்லை, சாவா, லாகூர் 1947, சூர்யா 45, தேரே இஷ்க் மே உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

ar rahman tamil cinema

பொதுவாக இவர் நெகடிவ் வார்த்தைகளை தனது பாடல்களில் பயன்படுத்துவது இல்லை. அதேபோல் சர்ச்சைக்குரிய விசயங்களை அவர் பேசுவதும் இல்லை. கூடுமானவரை அதை தவிர்த்து இசைக்கு அடுத்து ஆன்மிகம் என அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

அவருக்கு கடந்த 2009ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டபோது ஒரு விசயத்தைப் பகிர்ந்துகொண்டார். அது இப்போது அவரது ரசிகர்களால் மறக்க முடியாததாக இருக்கிறது. அவர், 'எனக்கு முன்னால் அன்பு மற்றும் வன்முறை என 2 பாதைகள் இருந்தன. நான் அன்பு வழியைத் தேர்வு செய்தேன்' என்றார். இந்தளவுக்கு தான் வாழ்வில் உயர்ந்ததற்கும் வெற்றிபெற்றதற்கும் அம்மா கரீமா பேகம்தான் காரணம் என அடிக்கடி நினைவு கூறிக்கொண்டே இருப்பார்.

அவர் அம்மாவைப் பற்றிப் பேசிய அளவுக்கு அப்பாவைப் பற்றிய நினைவுகளை அதிகம் பகிர்ந்து கொண்டதே இல்லை. முதன்முறையாக அதற்கான காரணம் என்ன என்பது பற்றி 'தி வீக்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் எடுத்துக் கூறியுள்ளார். அப்பாவின் மரணம் சகிக்கவே முடியாத ஒரு இருள்போல் இருந்தது. ஆகவேதான் அவரைப் பற்றி அதிகம் பேசியதில்லை என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பா அவரது இறுதிக்காலத்தில் எந்தளவுக்குச் சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார் என்பதையும் அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். தந்தையின் மறைவுக்குப் பிறகு ரஹ்மானின் தாய் தைரியமாக நின்று தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார். எனவே ரஹ்மானின் அம்மா கரீமா பேகத்தை அறிந்த அளவுக்கு அவரது அப்பா ஆர்.கே. சேகரைப் பற்றி பலரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

ரஹ்மான் தனது தந்தையிடம் இருந்துதான் கருணை, தாராள மனப்பான்மை, ஊக்கம் தரும்படியான உத்வேகம் ஆகியவற்றைக் கற்றதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரஹ்மான் பேசுகையில், "அப்பாவின் கடைசிக் காலம் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஏறக்குறைய அவர் வீட்டில் எந்தவித அசைவும் இல்லாமல் ஒரு கொலுவைப் போல் அசையாமல் இருந்தார். அவரது முகம் கிட்டத்தட்ட மண்டை ஓட்டைப்போன்று மாறியிருந்தது. கால் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன.

அவரது உருவம் எனக்கு இருண்மையாக இருந்தது. ஆனால், அவரது ஆசீர்வாதமே என் சகோதரிகளையும், ஜி.வி.பிரகாஷையும் என் பிள்ளைகளையும் என்னையும் வழிநடத்தி வருகிறது என்று நினைக்கிறேன்" என்று உருக்கமான பேசியிருக்கிறார் ரஹ்மான். இந்த அமைதிப் புயலுக்கு இப்படி ஒரு சோகமா என நினைக்கத் தோன்றுகிறது.

தந்தையின் மறைவுக்குப் பிறகு தாய்தான் எல்லாம் என்றும் தெரிவித்துள்ள ரஹ்மான், "அம்மா மிக வலிமையான நபர். அவர் சந்தித்த அவமானம் அதிகம். அப்படி இருந்தும் அவர் ஒருபோதும் மனம் தளரவில்லை. பெண்கள் தனித்து நின்று வெல்ல முடியும் என்பதை அவர் காட்டினார். ஆன்மிகத்தின் வழியே அவர் மீண்டு வந்தார். அவரிடம் இருந்து நான் கற்ற பாடம் அதுதான்" என்கிறார்.

ரஹ்மான் தன் பேட்டியில், "பிரார்த்தனை மிகவும் அவசியம். ஏனென்றால் நாம் இறைவனுடன் ஒன்றாகக் கலக்கும்போதுதான் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை உணர்கிறோம். ஆன்மிகமற்ற வாழ்வை நான் பயனற்றதாக உணர்கிறேன். இன்றைக்கு மதிப்பற்ற தன்மை அதிகம் உள்ளது. தகுதி கொண்டவராக உணர ஒரே வழி எல்லையற்ற சக்தியை அங்கீகரிப்பதன் ஒரே வழி" என்று கூறியுள்ளார். "பிரார்த்தனை எல்லா எதிர்மறை உணர்ச்சிகளையும் விரட்டுகிறது. இது மன வியாதிக்கான சிக்கல்களை நீக்கி, வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை உங்களுக்கு வழங்குகிறது" என்று பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+