அவ்வளவு சப்போர்ட் செஞ்சாரே.. இப்போ பாருங்க.. 2வது முறையாக.. மோடி நிகழ்வில் ஓபிஎஸ் புறக்கணிப்பு
சென்னை: பிரதமர் மோடி இன்று சென்னையில் கலந்து கொள்ளும் பாஜக கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டு உள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு மீண்டும் மீண்டும் பயணம் மேற்கொள்ள உள்ளார். பொதுவாக தேர்தல் காலங்களில் இப்படி பல்வேறு பொதுத்திட்டங்களை தொடங்கி வைக்க மோடி பயணம் மேற்கொள்வது அவசியம்.

அதேபோல் இந்த முறையும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். பாஜக கூட்டம் மற்றும் சில பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை புரிய உள்ளார். கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக மோடி தமிழ்நாடு வருகிறார்.
பிற்பகல் 3.30 மணிக்கு கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை பார்வையிடுகிறார். ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு சென்னை வரும் மோடி பாஜக கூட்டத்தில் கலந்து கொள்கிறார்
மோடி கருத்து: தமிழ்நாடு பயணம் குறித்து பிரதமர் மோடி செய்த போஸ்டில், நான் நாளை, மார்ச் 4ம் தேதி சென்னையில் இருப்பேன், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுகிறேன். மேலும் நகரில் பாஜக நடத்தும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றவுள்ளேன்., என்று கூறியுள்ளார்.
ஓபிஎஸ் புறக்கணிப்பு: இன்று மாலை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள அரசியல் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார். லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை முறையாக இங்கே மோடி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கூட்டணி தலைவர்களை பாஜக மேடையில் ஏற்றும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டணி தலைவர்களை மேடைக்கு ஏற்றப்பட உள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஓ பன்னீர்செல்வம் இந்த நிகழ்வில் அழைக்கப்படவில்லை. பாஜக மீண்டும் அவரை புறக்கணித்து உள்ளது.
பாஜகவை ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆதரித்து வருகிறார். அவரின் மகன் ஓ பி ரவீந்திரநாத்தும் பாஜகவை தொடர்ந்து ஆதரிக்கிறார். நாடாளுமன்றம், சட்ட மன்றம், சட்ட மன்றத்திற்கு வெளியே கூட இருவரும் பாஜகவை தொடர்ந்து ஆதரிக்கின்றனர். அரசியல் ரீதியான பிரச்சனைகள் அனைத்திலும் மோடியை ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.
அழைக்கப்படவில்லை: அப்படி இருக்க பிரதமர் மோடி இன்று சென்னையில் கலந்து கொள்ளும் பாஜக கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டு உள்ளார்.
என்ன காரணம்: அதிமுகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் உருவாக்கலாம் என்கிறார்கள் பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் சிலர்... குறைந்தது அதற்கான முயற்சிகளாவது நடக்கும் என்கின்றனர். கர்நாடகா உட்பட தென்னிந்தியாவில் பாஜக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது.
இந்த தொடர் தோல்விகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமூகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம். இப்படி இருக்க ஓ பன்னீர்செல்வத்தை கூட்டத்திற்கு அழைத்தால்.. எடப்பாடி தரப்பு மேலும் அப்செட் ஆகும் என்பதால் ஓ பன்னீர்செல்வம் அழைக்கப்படாமல் இருக்கலாம் என்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications