கரும்பு சாப்பிட்டால் உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா! இத்தனை பாதிப்பு வருமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் விழா இப்போது கோளகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கரும்பு தான். ஆனால், இந்த கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பார்களே.. அது ஏன் என்று தெரியுமா.. வாங்கப் பார்க்கலாம்.

தமிழர் திருநாளாம் பொங்கல் தை திங்கள் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருநாள் வெகு விமர்சியாக நேற்று கொண்டாடப்பட்டது.

பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பொங்கல் கொண்டாடப்படுவதால் சென்னை உட்பட பெருநகரங்களில் வசிப்போர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.

பொங்கல்

பொங்கல்

அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பொங்கும் பொங்கல் பானையும் பக்கத்திலேயே இருக்கும் கரும்பும் தான். கரும்பு இல்லாமல் எந்தவொரு பொங்கல் பண்டிகையும் முழுமையடையாது. ஆண்டு முழுக்க நமக்குச் சர்க்கரை உற்பத்திக்குப் பயன்படும் கரும்பை வைத்து கரும்பு ஜூஸ் கிடைத்தாலும் கூட இந்த கருப்பு கரும்பு இந்த காலகட்டத்தில் மட்டுமே கிடைக்கும்.

கரும்பு

கரும்பு

இதனால் அனைவரும் பொங்கல் காலத்தில் இந்த கரும்பை வாங்கி ஒரு பிடி பிடிப்பார்கள். கரும்பின் இனிப்பும் அதில் ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை கரும்பை ருசி பார்ப்பார்கள். ஆனால், கரும்பைத் தின்றவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பார்களே அது ஏன் என்று தெரியுமா... வாங்கப் பார்க்கலாம்.. எப்போதும் தினசரி குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் பரிந்துரை. அப்படிக் குடித்தாலே போதும் நமக்குப் பல நோய்கள் வராது என்றே மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

 தண்ணீர் குடிக்கக் கூடாது

தண்ணீர் குடிக்கக் கூடாது

நீர் குடிக்காமல் இருந்தால் நமக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படக் கூடும். ஆனால், சில குறிப்பிட்ட வகையிலான பொருட்களைச் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காமல் இருப்பதே சரியானதாக இருக்கும். அதில் முக்கியமானது கரும்பு. பொதுவாகப் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு நமது வீட்டில் உள்ள சிறார்களின் வாய்களில் சூட்டுப் புண் போல ஏற்பட்டு இருக்கும். இதனால் பெற்றோர் பதறியடித்து கொண்டு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வார்கள். அவர்கள் கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்து இருப்பார்கள். அதுவே இதற்குக் காரணம்.

 இதுதான் காரணம்

இதுதான் காரணம்

கரும்பு சாப்பிட்ட உடன் நீர் குடிக்கவே கூடாது. குறைந்தது 30 நிமிடங்களுக்குப் பிறகு தான் தண்ணீர் குடிக்க வேண்டும். நமது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இதைச் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஆனால், அதற்கான காரணத்தைச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் கரும்பில் சுண்ணாம்புச் சத்து எனப்படும் கால்சியம் அதிகமாக உள்ளது. அதேபோல பொட்டாசியமும் கரும்பில் நிறைந்துள்ளன. கரும்பு சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால், இந்த தாதுகள் தண்ணீருடன் வினை புரியும். இதனால் தான் கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்கிறார்கள்

 என்ன பிரச்சினை வரும்

என்ன பிரச்சினை வரும்

இதனால் முக்கியமாக வாயில் புண் வரும்.. இது தவிர வயிற்று வலி, வீக்கம், நெஞ்சில் மெல்லிய வலி, வயிற்றுப் புண்கள், தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, கரும்பைச் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க வேண்டாம். கரும்பைச் சாப்பிட்ட உடன் நமக்கு மெல்லிய தாகம் போன்ற ஒரு உணர்வு எடுக்கத்தான் செய்யும். ஆனாலும், தண்ணீர் குடிக்காமல் கொஞ்ச நேரம் இருந்து விடுங்கள். இல்லையென்றால் வாய் வெந்துவிடும்.

 குழந்தைகள் மீது கண் இருக்கட்டும்

குழந்தைகள் மீது கண் இருக்கட்டும்

பெரியவர்களுக்குக் கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது எனத் தெரியும் என்பதால் அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். ஆனால் பெரும்பாலும் குழந்தைகளுக்கு இது தெரியாது. அவர்கள் கரும்பு தின்றவுடன் தாகம் போன்ற உணர்வு வருவதால் நீரை எடுத்துக் குடித்துவிடுவார்கள். இதனால் அவர்களுக்கு மறுநாள் வாயில் புண் ஏற்பட்டுவிடும். இதனால் பொங்கல் கொண்டாட்டத்தில் குழந்தைகளைக் கரும்பைச் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் நேரம் தண்ணீர் குடிப்பதில்லை என்பதையும் உறுதி செய்தால் நலம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+