Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

G.D.Naidu Flyover: நாயுடு, ரெட்டி ஜாதிகளின் மீது மட்டும் ஸ்டாலினுக்கு நேசம்! பாஜக சேகர் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெட்டி, நாயுடு ஜாதிகளின் மீது மட்டும் ஏன் முதல்வர் ஸ்டாலினுக்கு நேசம், இது என்ன 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு ஓட்டு வேஷமா என தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை அவினாசி சாலையில் முதல் நீளமான மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டதற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

sr sekar mk stalin gd naidu

இதுகுறித்து எஸ்.ஆர்.சேகர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் பிள்ளை சிதம்பரனார், முத்துராமலிங்கத் தேவர் முத்துராமலிங்கனார், சங்கரலிங்க நாடார் சங்கரலிங்கனார் ஆன போது, ஜி.டி.நாயுடு கோபால்சாமி துரைசாமியார் ஆகல, முத்துலட்சுமி ரெட்டி முத்து லெட்சுமியார் ஆகல, இது செலக்டிவ் ஜாதி நேசமா?, 2026 க்கு ஓட்டு வேஷமா? #திராவிடமாடல் பதில் சொல்லுமா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

sr sekar mk stalin gd naidu

கோவை அவினாசி சாலையில் 10.10 கி.மீ. தூரத்திற்கு தமிழகத்தின் முதல் நீளமான மேம்பாலத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த பாலம் ரூ 1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இதில் 301 தூண்களும் 610 சாலை விளக்குகளும் கொண்டது. 17.25 மீட்டர் அகலம் கொண்டது. இந்த பாலத்திற்கு ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

sr sekar mk stalin gd naidu

அந்த வகையில்தான் எஸ்.ஆர்.சேகரும் இவ்வாறு பெயர் வைத்ததற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 2026 ஆம் ஆண்டு நாயுடுக்களின் வாக்குகளை அள்ளுவதற்காக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜி.டி. நாயுடு என்பதற்கு பதிலாக கோபால்சாமி துரைசாமியார் பாலம் என வைத்திருக்கலாமே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

sr sekar mk stalin gd naidu

இன்று தான் செய்திகளில் பார்த்தேன் ஜாதி பெயரில் தெருக்களின் பெயரோ சாலையின் பெயரோ இருக்கக் கூடாது என்று ஆனால் நாயுடு என்ற பெயரில் இருந்தால் அது ஜாதி பெயர் இல்லை என்று நினைக்கிறேன்... மற்றும் ஒன்று கூறுகிறேன் அந்த ஜாதியை நான் எதிர்ப்பவன் அல்ல இவர்களுடைய ஆட்சியை மட்டுமே எதிர்க்கிறேன். இவ்வாறு இந்த நெட்டிசன் கூறியுள்ளார்.

sr sekar mk stalin gd naidu

சேகர், நீங்கள் சாதி வேண்டும் என்று சொல்கிறீர்கள்! நீங்களே அதற்கு பேர் சொல்லுங்கள்! விஞ்ஞானி துரைச்சாமி, டாக்டர் முத்துலட்சுமி எனச் சொல்லி பெருமைப் படுத்துங்களேன்! உங்கள் நோக்கம் அவமானப்படுத்துவது. இது தெருவிற்கு மட்டுமல்ல! அனைவருக்குமானது. இவ்வாறு இந்த நெட்டிசன் கூறியுள்ளார்.

sr sekar mk stalin gd naidu

ஒட்டு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யும் இந்த திராவிட மாடல் ஆட்சி. இதே கோவையில் தியாகி சுதேசி நம் நாட்டின் சுதந்திரம் பெற செக்கிழுத்த வரலாறு உண்டு. ஏன் அவர் பெயரில் சாதி பின்னணி இல்லை. காரணம் கோவை மாவட்டத்தில் அதிக மக்கள் அந்த சாதியை சார்ந்த மக்கள் இல்லாதது ஒட்டுக்கு? இவ்வாறு இந்த நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

sr sekar mk stalin gd naidu

தமிழர்கள் ஜாதி பெயர் போடக்கூடாது. மற்றவர்களுக்கு அந்த தடையில்லை. அதனால் தான் நான் என்னுடைய ஜாதி பெயரை சேர்த்து பயன் படுத்துகிறேன். திராவிட எச்சைகளுக்கு தமிழர்கள் மீது தீராத வன்மம் உள்ளதே காரணம். திருமலை நாயக்கர், திருமலையார் ஆக வில்லை. இவ்வாறு நெட்டிசன்கள் எஸ்.ஆர்.சேகருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். தெருக்களில் ஜாதி பெயரை நீக்கி உத்தரவு ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மேம்பாலத்திற்கு மட்டும் ஏன் ஜாதி பெயர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+