கட்சியே காணாம போயிடும்.. மோடிக்கு எதிராக ஒன்று கூடிய 15 கட்சிகள்.. காரணம் இதுதான்! உடைத்த எக்ஸ்பர்ட்
சென்னை: பாட்னாவில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி மாபெரும் ஆலோசனை கூட்டம் நடத்தியதற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் குமார் பேட்டி அளித்துள்ளார்.
தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. கடந்த வாரம் பாட்னாவில் பாஜகவிற்கு எதிராக 15 எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை செய்தன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் குமார் பேட்டி அளித்துள்ளார். ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அங்கும் கூட கடுமையான எதிர்ப்பு இருந்துள்ளது. இதற்கு முன்பெல்லாம் வரவேற்பு மட்டுமே இருக்கும். ஆனால் இந்த முறை கடுமையான எதிர்ப்பும் இருந்துள்ளது. இங்கே இந்தியாவிலும் எல்லோரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
பாட்னாவில் 15 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. வர மாட்டார்கள் என்று நினைத்த ஆம் ஆதமி கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸ் மமதா ஆகியோர் வந்துள்ளனர். இவர்கள் பிரதமர் மோடியை வீழ்த்த போகிறார்கள். கர்நாடகாவில் மோடியின் செல்வாக்கு இல்லை என்பது தெளிவானது.
மோடி தோல்வி அடைந்துவிட்டார் என்பது கர்நாடகாவில் உறுதியானது. எனக்கு ஓட்டு போடுங்கள் என்றுதான் அவர் கோரிக்கை வைத்தார். ஆனால் மக்கள் வாக்களிக்கவில்லை. எமர்ஜென்சிக்கு பின் இப்படித்தான் எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்தன. எல்லா கட்சியும் ஒன்றாக சேர்ந்து போட்டியிட்டன.

இதில் அவர்கள் பெரும்பான்மையும் பெற்று ஆட்சி அமைத்தனர். அதேபோல் தற்போதும் எதிர்க்கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. பொது வேட்பாளர் அமைப்பது, கூட்டணி வைப்பது போன்ற சில முன்னெடுப்புகளை இவர்கள் வைத்துள்ளனர். இதை எல்லாம் தெரிந்துதான் இவர்கள் ஆலோசனை செய்தனர். மத்தியில் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றுதான் இவர்கள் ஒன்று கூடி உள்ளனர்.
நமக்கு இடையே பிரச்சனை இருக்கலாம். ஆனால் அந்த சின்ன பிரச்சனைக்காக மோடியை எதிர்க்காமல் இருக்க கூடாது. மோடியை எதிர்க்க வேண்டும் என்றால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யார் ஆள வேண்டும் என்பது பிரச்சனை இல்லை. யார் ஆள கூடாது என்பதுதான் பிரச்சனையே.
அதனால்தான் இவர்கள் எல்லோரும் ஒரே புள்ளியில் ஒன்று சேர்ந்து உள்ளனர். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவில்லையா? அப்படித்தான் இதுவும். இவர்கள் இங்கே சேர முடியும் என்றால் தேசிய அளவிலும் சேர முடியும். கட்சி இருக்க வேண்டும் என்றால் பாஜகவிற்கு எதிராக எல்லோரும் ஒன்று கூட வேண்டும்.
எதிர்க்கட்சிகள் கமிட்டி பார்ம் செய்து யார் பிரதமர், யார் கூட்டணியை முன்னடத்துவார் என்று ஆலோசனை செய்வார்கள். அதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இந்த முயற்சி பெயில் ஆகட்டும். ஆனால் முயற்சி எடுக்காமல் இருக்க முடியாதே? இப்போது பாஜகவை எதிர்க்காமல் இருந்தால் கட்சியே காணாமல் போய்விடும். கட்சியை காப்பாற்ற வேண்டும்.. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் எல்லாமே ஒன்று கூட வேண்டும் , என்று மூத்த பத்திரிகையாளர் குமார் பேட்டி அளித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications