ஒற்றைத் தலைமைக்கான போட்டி இல்லை.. மேட்டரே வேறயாமே.. "அவர்" வெர்சஸ் யார்?.. பரபரக்கும் அதிமுக
சென்னை: அதிமுகவில் இந்த ஒற்றைத் தலைமை குறித்த பேச்சுவார்த்தை ஏன் நடைபெறுகிறது? ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிச்சாமியும் தங்களுக்கான செல்வாக்கை காட்டிக் கொள்ள நினைப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினை மோதலில் தொடங்கி தற்போது அடிதடி வரை சென்றுள்ளது. இரு தலைமைகளுமே கடந்த 5 நாட்களாக தனித்தனியே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இரு தலைமையின் ஆதரவாளர்களும் தங்கள் தலைமைதான் ஒற்றைத் தலைமையாக வேண்டும் என கருதி ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி வருகிறார்கள். வரும் 23 ஆம் தேதி வரை தினந்தோறும் அதிமுகவில் புயலை கிளப்பும் சம்பவங்களுக்கு பஞ்சமிருக்காது போல் தெரிகிறது.

ஒற்றைத் தலைமை
ஓபிஎஸ் அளித்த பேட்டியில் ஒற்றைத் தலைமை குறித்து தனக்கு ஆசை இல்லை, அதில் நம்பிக்கையும் இல்லை என்றார். மேலும் தொண்டர்களுக்காக விட்டுக் கொடுத்தது போதும் என்றும் கூறி வருகிறார். அது போல் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை ஒற்றைத் தலைமை குறித்து எதையும் வெளிப்படையாக பேசவில்லை.

தொண்டர்கள் வருகை
அவ்வாறிருக்கும் போது இந்த தொண்டர்கள் எதற்காக அடித்துக் கொள்கிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது. மேலும் ஒற்றைத் தலைமையில் ஆசையில்லாவிட்டால் ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் எதற்காக ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து அரசியல் நிபுணர் ரவீந்திரநாத் துரைசாமி, ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

அதிகாரப் போட்டி
அவர் கூறுகையில் எடப்பாடி பழனிச்சாமி- ஓபிஎஸ் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. இருவரில் யாருக்கு தொண்டர்கள் செல்வாக்கு அதிகம் என்பதை பார்க்கவே இந்த பலப்பரீட்சை. இதே போன்று எம்ஜிஆர் - கருணாநிதி இடையே போட்டி நடந்தது. அப்போது எம்ஜிஆருக்கு 30 சதவீத ஆதரவும் கருணாநிதிக்கு 25 சதவீத ஆதரவும் இருந்தது.

வாக்கு சதவீதம்
அது போல் பா.ரா.வுக்கும் மூப்பனாருக்கும் இடையேயான போட்டியில் முறையே 16.5 சதவீதம், 17.5 சதவீதம் பெற்றனர். மேலும் ஜானகி ராமசந்திரனுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையேயான போட்டியில் 9.1 சதவீதமும் ஜெயலலிதா 21 சதவீதமும் பெற்றார். அது போல் எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் யாருக்கு செல்வாக்கு என்பதை அறிய விரும்புகிறார்கள்.

எம்ஜிஆருக்கு தொண்டர்கள் பலம்
எம்ஜிஆருக்கு எப்படி தொண்டர்கள் பலம் இருந்ததோ , அதே பாணியை ஓபிஎஸ் கையிலெடுக்கிறார். மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்களின் ஆதரவு தனக்கு இல்லாததை அறிந்த அவர் தொண்டர்களை ஆதரவை பெற முயற்சித்து வருகிறார். அவ்வப்போது தலைமை அலுவலகத்திற்கு வந்து தனக்கான ஆதரவு பலத்தை எடப்பாடி தரப்புக்கும் காட்டுகிறார். மேலும் தனக்கு மக்களும் தொண்டர்களும் இருக்கிறார்கள் என ஓபிஎஸ் நம்புகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி
அதே வேளையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 66 எம்எல்ஏக்களில் 62 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு 80 சதவீதம் உள்ளது. இருவருமே முன்னாள் முதல்வர்கள் என்பதால் வரும் 2026ஆம் ஆண்டு ஸ்டாலினை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக யார் தகுதியானவர் என்பதில் இந்த போட்டி நடைபெறுகிறது.

2026 ஆம் ஆண்டு தேர்தல்
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்ததால் எல்லாவற்றையும் ஓபிஎஸ் விட்டுக் கொடுத்தார். ஆனால் தற்போது ஆட்சியில் இல்லாத இந்த சூழலில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது யார் முதல்வர் வேட்பாளர் என்பதற்கான போட்டியை இப்போதே தொடங்கியுள்ளார்கள் என அரசியல் விமர்சகர் தெரிவித்தார்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications