கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி.. காவல்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு
சென்னை: கோவையில் வரும் 18 ம் தேதி பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காவல்துறையின் வாதத்தை ஏற்காத நிலையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி வழங்க அதிரடியாக உத்தரவிட்டார்.
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். மீண்டும் பிரதமர் மோடி வரும் 18-ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் மோடி கோவை வருகிறார்.

இந்த வேளையில் கோவை கவுண்டம்பாளையத்தில் தொடங்கி மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரம் வழியாக தலைமை அஞ்சல் நிலைய சந்திப்பு வரை திறந்த காரில் நின்றவாறு பிரதமர் மோடி பேரணி செல்ல திட்டமிடப்பட்டது. மொத்தம் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு, காரில் நின்றவாறு பொதுமக்களிடம் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன்,பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக கோவை மாவட்ட பாஜக அறிவித்திருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் பேரணி நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கோவை காவல்துறையிடம் பாஜக கடிதம் வழங்கினார்.
ஆனால் கோவை காவல்துறை பிரதமர் மோடியின் பேரணி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை. பாதுகாப்பு காரணம் கருதி கோவை காவல்துறை இன்று அனுமதி மறுத்துவிட்டது. இதை எதிர்த்து கோவை மாவட்ட பாஜ தலைவர் ரமேஷ் குமார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராகி, வரும் 18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ரோடுஷோ நடத்தி உள்ளதாக தெரிவித்தார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், 18ஆம் தேதி நிகழ்ச்சிக்கு 14 ம் தேதி கடிதம் தான் கொடுத்ததாகவும், 18 மற்றும் 19 ம் தேதி பொதுத்தேர்வு உள்ளதாகவும், கோவை பதட்டம் நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையும், காவல் துறையிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று மாலை 4.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்து ஒத்திவைத்தார். அதன்பிறகு மாலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், வரும் 18 ம் தேதி கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன்மூலம்
வரும் 18 ம் தேதி பிரதமர் மோடியின் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications