ஓஹோ.. அன்புமணிகிட்ட "இப்படி" ஒரு பிளான் இருக்கா.. எடப்பாடியே கண்டிக்கலையே.. குட்டையை குழப்பிய மாஜி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை திடீரென பாமக எதிர்க்க காரணம் இருக்கிறது, அன்புமணி ராமதாஸிடம் வேறு ஒரு பிளான் இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா அரசியலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே அதிமுகவை அன்புமணி கடுமையாக தாக்கி வருகிறார். அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். நாங்கள் தனியாகத்தான் நிற்போம் என்று அன்புமணி ராமதாஸ் வருகிறார்.

சமீபத்தில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார். அதில், அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள். பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார்.

பாமக

பாமக

அந்த அளவிற்கு பாமகவின் குரலுக்கு மதிப்பு இருக்கிறது. சிலர் தினமும் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள், பேட்டி கொடுக்கிறார்கள், அப்படி ஏன் செய்யவில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள். சிலர் இப்படி விளம்பரத்திற்காக செய்வார்கள். விளம்பரத்திற்காக வாட்ச் காட்டுவார்கள். இதெல்லாம் நமக்கு தேவை இல்லை, என்று அன்புமணி ராமதாஸ் அதிமுகவை விமர்சனம் செய்து, திமுகவை பாராட்டுவது போல பேசி இருந்தார். பாமக அதிமுகவை திடீரென எதிர்ப்பு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பாமக இந்த நிலைப்பாட்டிற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா அரசியலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி

பேட்டி

அவரின் பேட்டி பின்வருமாறு.. தலைவலி போய் திருகு வலி ஏற்பட்டது போல.. அதிமுக உட்கட்சி மோதலே இன்னும் முடிவிற்கு வரவில்லை.. ஆனால் அதற்குள் அதிமுக - பாமக இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. எடப்பாடி மெகா கூட்டணி அமைப்போம் என்று கூறி இருந்தார். அப்போதே கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக எல்லாம் வருமா என்று கருத்துக்கள் வைக்கப்பட்டன. 2019ல் இருந்தே பாமக அதிமுக கூட்டணியில் இருந்ததால் இவர்கள் கூட்டணி தொடருமா என்று கேள்வி எழுந்தது. ஆனால் சமீபத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், பாமக 2024ல் தனியாக நிற்கும் என்று கூறினார். அப்போதே அவரின் பேச்சு கவனம் பெற்றது. அதிமுக நான்காக உடைந்து கிடக்கிறது என்று அவர் பார்க்கிறார்.

எடப்பாடி

எடப்பாடி

இதனால் அதிமுகவுடன் இணையும் எண்ணத்தில் பாமக இல்லை. உடைந்த அதிமுகவில் இணைந்தால் பயன் இல்லை என்று நினைக்கிறார். எடப்பாடியும் இன்னும் தான்தான் ஒட்டுமொத்த அதிமுக என்பதை நிரூபிக்கவில்லை. தொண்டர்கள் எல்லோரும் தன் பக்கம் இருக்கிறார்கள். தேர்தலில் நின்றால் வெற்றிபெறுவேன் என்பதை எடப்பாடி நிரூபிக்கவில்லை. இதனால் பாமக இவர்களுடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்வி உள்ளது. பாமகவின் எம்பி பதவிக்கு அதிமுகதான் காரணம் என்று ஜெயக்குமார் கூறுகிறார். பாமகவிற்கு அங்கீகாரம் கிடைக்கவே அதிமுகதான் காரணம் என்று ஜெயக்குமார் சொல்கிறார். அந்த தகுதி அவருக்கு இல்லை. அது ஜெயலலிதா காலத்தில் நடந்தது. அன்புமணிக்கு எம்பி பதவி கிடைக்க அதிமுக காரணம். ஆனால் அது ஒன்னும் தர்மத்திற்கு கிடைத்த பதவி இல்லை.

பாமக அதிமுக

பாமக அதிமுக

பாமக தேர்தல் நேரத்தில் அதிமுகவிற்கு உதவியாக இருந்தது. வடக்கு மாவட்டத்தில் அதிமுக 16-17 இடங்களில் வெல்ல பாமக அதிமுகவிற்கு உதவியாக இருந்ததுதான் காரணம். பாமக வாக்குகள் வட மாவட்டத்தில் அதிமுகவிற்கு வந்தது. அவர்கள் இதை சொல்லி காட்டலாமா? பாமகவை வைத்து தானே 16 - 17 இடங்களை அதிமுக வென்றது. அவர்கள் இல்லையென்றால் அதிமுக 50 இடங்களை கூட வென்று இருக்காது. அப்படி இருக்கும் போது எம்பி பதவியை பற்றி அதிமுக சொல்லிக்காட்டலாமா? ஜெயக்குமார் ஏன் பாமகவை விமர்சனம் செய்கிறார். அவர் எடப்பாடி சொல்லி பேசுகிறாரா., சொல்லாமல் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவர் எல்லை மீறிக்கொண்டு இருக்கிறார். கட்சி பதவியில் இல்லை.,

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

ஜெயக்குமார் எம்பி இல்லை. எம்எல்ஏ தேர்தலிலும் வெல்லவில்லை. இதனால் அவர் எல்லை மீறி, பதற்றத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார். எடப்பாடியும் இவர்களை கண்டிப்பது இல்லை. எடப்பாடி யாரையும் கண்டிப்பது இல்லை. யாரையாவது கண்டித்தால் அவர்கள் ஓபிஎஸ் டீமில் சேர்ந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் எடப்பாடி இருக்கிறார். அதை வைத்துக்கொண்டு அதிமுகவில் பலரும் பல விதமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடிதான் கண்டிக்கவில்லையே என்று ஜெயக்குமார் தொடங்கி சிவி சண்முகம் வரை பலரும் மனதில் தோன்றியதை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

சிவி சண்முகம்

சிவி சண்முகம்

எடப்பாடியும் தான்தான் அதிமுக என்பதை இன்னும் நிரூபிக்கவில்லை. தான்தான் அதிமுகவின் வலிமையாக தலைவர் என்பதை எடப்பாடி நிரூபிக்கவில்லை. அதிமுக இப்படி பிரிந்து கிடப்பதை பாமகவும், பாஜகவும் பயன்படுத்திக்கொள்கிறது. அதிமுக ஒன்று பட்டால் தங்களால் வளர முடியாது என்று இவர்கள் நினைக்கிறார்கள். பாமக தங்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என்று முயன்ற வருகிறது. மற்ற இடைநிலை கட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்று பாமக நினைக்கிறது. இப்போது அதிமுக மோதலுக்கு இடையில் கட்சியை வளர்க்க வேண்டும் என்று பாமக நினைக்கிறார்.

அதிமுக

அதிமுக

இன்னொரு பக்கம் பாமக இப்படி திடீரென எதிர்க்க வேறு ஒரு காரணம் இருக்கிறது. அன்புமணியிடம் வேறு ஒரு பிளான் இருக்கிறது. அதிமுகவை சீண்டுவது போல சீண்டினால்தான் அடுத்த தேர்தலில் அதிமுகவிடம் அதிக இடங்களை கேட்டு வாங்க முடியும் என்று அன்புமணி நினைக்கிறார். கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்தும் அதிமுக தங்களுக்காக வேலை செய்யவில்லை என்று பாமக நினைக்கிறது. அதில் உண்மையும் உள்ளது. கடந்த தேர்தலில் பாமக கூட்டணியால் அதிமுக பலன் அடைந்தது. ஆனால் அதிமுகவால் பாமக பலன் அடையவில்லை. எனவே பாமகவிற்கு நாங்கள்தான் எம்பி பதவி கொடுத்தோம் என்றெல்லாம் ஜெயக்குமார் பேச கூடாதும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+