இதனால்தான் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தோம்.. பாமக கூட்டணி குறித்து அன்புமணி விளக்கம்!
லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்று பாமக எம்பி டாக்டர்.அன்புமணி ராமதாஸ் இன்று விளக்கம் அளிக்க உள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டும், வளர்ச்சி திட்டங்களை கருத்தில் கொண்டும் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் என்று பாமக எம்பி டாக்டர்.அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்து உள்ளார்.
அதிமுக தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாமக - அதிமுக ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது.
கடல் வற்றினாலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அன்புமணி பலமுறை செய்தியாளர் சந்திப்பில் பேட்டி அளித்து இருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்று பாமக எம்பி டாக்டர்.அன்புமணி ராமதாஸ் இன்று விளக்கம் அளித்து உள்ளார்.

முழு அதிகாரம்
அவர் தனது பேட்டியில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழு முடிவு செய்தது. நிர்வாகிகளை கேட்டறிந்த பின்பே கூட்டு முடிவின்படி அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். பாமக நிர்வாகிகள், தொண்டர்களின் அனுமதியுடன்தான் கூட்டணி வைக்கப்பட்டது.

முழு வாக்குறுதி
முதல்வர் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அடிப்படையில் கூட்டணி அமைத்தோம். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டுவரக் கூடாது என கோரிக்கை வைத்தோம். பாமகவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். பூரண மதுவிலக்கு குறித்தும் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

என்ன நோக்கம்
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது எங்களின் நோக்கமல்ல. தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே நோக்கம். எங்களின் தேர்தல் அறிக்கையே மிக சிறந்த அறிக்கை. தேர்தல் அறிக்கையைத்தான் நாங்கள் அதிமுகவிடம் கோரிக்கையாக வைத்தோம். எங்கள் கோரிக்கையை அதிமுக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

தனிக்கட்சி
தமிழகத்தில் இனி தனியாக போட்டியிட்டு யாருமே வெல்ல முடியாது. தமிழகத்தில் தனியாக வெல்லும் அளவிற்கு யாருக்கும் பலம் கிடையாது. அந்தக்காலம் எல்லாம் முடிந்துவிட்டது. இனி எல்லாமே கூட்டணிதான். அதனால்தான் நாங்கள் கூட்டணி வைக்க முடிவு செய்தோம், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications