பேப்பரை கிழித்த ராகுலுக்கு நேர்ந்தது தெரியுமா? அன்புமணிக்கு அதெல்லாம் நினைவிருக்கா? குவிந்த கண்டனம்
சென்னை: செய்தியாளர் சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடந்து கொண்ட விதம் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
2013 ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தொடர்பான முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், குறைந்தபட்சம் இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்ய மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படாது. மாறாக உடனடியாக அவர்கள் பதவியில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறியது.

அந்த தீர்ப்பிற்கு எதிராக ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் அவசர அவசரமாக ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. அதாவது உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டியது இல்லை என்று திருத்தம் செய்து அவசர சட்ட மசோதாவை கொண்டு வந்தது.
காங்கிரஸ் அரசுதான் கொண்டு வந்திருந்தது என்றாலும்.. காங்கிரஸ் தலைவராக அப்போது இருந்த ராகுல் காந்தி இதை கடுமையாக எதிர்த்தார். காந்தி தனது கட்சியின் முடிவுக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். இந்த நடவடிக்கை "முழு முட்டாள்தனம்" என்று விமர்சித்தார். அதோடு செய்தியாளர் சந்திப்பில் அந்த சட்ட மசோதாவின் நகலை அவர் கிழித்தும் போட்டார்.
அவரின் செயல்.. தான் ஒரு ஹீரோ என்று நினைத்து செய்தது. ஆனால் அதுவே அவருக்கு எதிராக மாறியது. ஆணவக்காரர். ஷோ போடுகிறார். அவரின் கட்சி தானே.. மசோதா வரும் முன் தடுக்காமல் ஏன் செய்தியாளர் சந்திப்பில் சட்ட நகலை கிழிக்க வேண்டும்.. என்ன ஆணவம் என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
அந்த சம்பவம் ராகுல் காந்தியின் இமேஜை டேமேஜ் செய்தது. அதன்பின் அரசியலில் பல விஷயங்களில் பலத்த அடி கிடைத்த பின் தற்போது தன்மையாக மாறி இருக்கும் ராகுல் காந்தி.. மென்மையாக பேசுவது, செய்தியாளர் சந்திப்பில் அன்பை, கனிவை பற்றி பேசுவது என்று தன்னை மெருகேற்றிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அந்த ஒரு சம்பவம் அரசியல் ரீதியாக ராகுலை பாதித்தது. அவருக்கு பெரிய பாடமாக இது அமைந்தது.
அன்புமணி அதே செயல்; அப்படி ஒரு சம்பவத்தைதான் செய்தியாளர் சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்துள்ளார். அவர் நடந்து கொண்ட விதம் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
அதன்படி செய்தியாளர் சந்திப்பில், சட்டப்பேரவைக்கு நேரமானதாக கூறிய ஜி.கே.மணியிடம் கடுப்பாகி பதில் அளித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். அதில் நீங்க சட்டசபைக்கு போய் என்ன பண்ண போறீங்க? அங்க அப்படியே பேச போறீங்களா? நீங்க பேசுவதை கேட்டுடுவாங்கா? உங்களை அங்கே பேசவே விட மாட்டாங்க? நீங்க பேசிதான் மாறுமா? , என்று அன்புமணி பேசியதற்கு கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
விமர்சனம்: அன்புமணியின் உடல்மொழி அவர் ஆணவமாக பேசியது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இவ்வளவு வெளிப்படையாக மூத்த தலைவரை செய்தியாளர் சந்திப்பில் விமர்சனம் செய்வது திகைப்பாக இருக்கிறது.
முக்கியமாக நீங்கள்தான் எம்பியாக இருந்தும் நாடாளுமன்றத்திற்கு கூட செல்வது இல்லை.. சிஏஏ சட்டத்தில் ஆதரவாக வாக்களிக்க மட்டும் சென்றீர்கள்.. உங்கள் எம்எல்ஏ சட்ட சபைக்கு செல்ல கூடாதா? என்று நெட்டிசன்கள் கேட்டு விமர்சனங்களை வைக்கின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications