அரசு பஸ் நடத்துநர்களுக்கு அபராதம்.. "போலீஸ் பழிவாங்கல்?" என்ன நடக்கிறது.. தொழிற்சங்க நிர்வாகி பரபர
சென்னை: அரசு பஸ் நடத்துநர்களுக்குப் பல இடங்களில் போலீசார் அபராதம் விதிப்பதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்குநேரியில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுத்து அரசு பஸ் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருள் ஆனது.

அதைத் தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் அரசு பஸ் நடத்துநருக்கு நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல வேறு சில இடங்களிலும் அபராதம் விதிக்கப்பட்டன.
அண்ணா தொழிற்சங்க நிர்வாகி: இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "அரசு பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் டிக்கெட் வாங்க வேண்டும் என்பதே ரூல்ஸ்.. அந்த காவலரிடம் வாரண்ட் இல்லை.. வாரண்ட் இருந்து அதைக் காண்பித்து இருந்தால் நடத்துநர் டிக்கெட் எடுக்கச் சொல்லி இருக்க மாட்டார்.. வாரண்ட் இல்லாததால் நடத்துநர் டிக்கெட் எடுக்கச் சொல்லி இருக்கிறார்..
இதில் தான் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் எங்களிடமே டிக்கெட் கேட்கிறீர்களா என சொல்லி.. அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் மீது போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
என்ன நடந்தது: இதில் என்ன நடந்தது என்றால்.. மதுராந்தகத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்து எப்போதும் கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் தான் ஓரமாக நிறுத்துவார்கள்.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் செல்ல விரும்பும் ஓரிரு பயணிகள் அங்குச் செல்வார்கள். அவர்களையும் கூட போலீசார் தான் சாலையைக் கடக்க உதவுவார்கள். அப்படி நடந்த சம்பவத்தில் தான் அவர் நோ பார்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் என ரூ.500ஐ அப்பரதமாகப் போட்டுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
என்ன காரணம்: இந்த அரசு அவசர அவசரமாகப் பேருந்து நிலையத்தைத் திறந்ததன் விளைவு தான்து. பேருந்து நிலையத்தில் சின்ன சின்ன விஷயங்களை மாற்றலாம் என்றோம்.. ஆனால், கருணாநிதி நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக முழுமையடையாத பேருந்து நிலையத்தைத் திறந்தார்கள்.
தென் தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வர வழி இல்லாததால் தேவையில்லாமல் சுமார் 3 கிமீ சுற்றி வருகிறது. இதற்கு ஒரு லிட்டர் டீசல் செலவாகும். அப்போது தினசரி எத்தனை பேருந்துகள் செல்கின்றன.. இதனால் எந்தளவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதை யோசித்துப் பாருங்கள். நிலைமை இப்படி இருப்பதால் 2, 3 பயணிகளை இறக்கிவிட 30 நிமிடம் சுற்றி வர முடியாது. இதன் காரணமாகவே எதிர்புறம் இறக்கிவிடுகிறோம். பயணிகளுக்கும் இது ஓகே தான்.
பழிவாங்கல் நடவடிக்கை: ஆனால், பழிவாங்கும் நடவடிக்கையாக எங்கள் நடத்துநர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.
இவர்கள் முறையான வசதிகளைச் செய்யாமல் பேருந்து நிலையத்தைத் திறந்ததே இதற்குக் காரணம். மேலும் ஒட்டுமொத்த பேருந்து நிலையத்திற்கும் ஒரே ஒரு ஏடிஎம் தான் இருக்கிறது.. அதில் எதாவது சிக்கல் ஏற்பட்டால் என்ன நடக்கும் என யோசித்து பாருங்கள்.. இதுபோல தான் அவசர கதியில் பேருந்து நிலையத்தைத் திறந்துள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications