வெள்ளத்தில் ஏடிஎம் கார்டு தொலைந்திருக்கும்.. அதனால்தான் ரொக்கமாக வழங்கினோம்.. கோர்ட்டில் தமிழக அரசு!
சென்னை: வெள்ளத்தில் ஏடிஎம் கார்டுகள், வங்கி கணக்கு விவரங்களை மக்கள் தொலைத்திருக்கக் கூடும் என்பதால் நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரண தொகையை அதிகரித்து வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வெள்ள நிவாரணம் என்பது உடனடியாக வழங்க வேண்டியது, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், நிவாரணம் வழங்குவதை தாமதப்படுத்த முடியாது என்று தெரிவித்தது. உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், வெள்ள நிவாரணம் இந்த வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அரசு பிளீடர் முத்துகுமார் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரத்து 450 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக விடுவிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதேபோல, நிவாரண உதவி கோரி விண்ணப்பிக்கும், குடும்பங்களில் தோராயமாக 10 சதவீத குடும்பத்தினருக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 31 கோடியே 74 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 23 லட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக, நிவாரண தொகை வழங்கபட்டுள்ளதாகவும், நிவாரணத் தொகை கோரி அளிக்கப்பட்டுள்ள 7 லட்சத்து 3 ஆயிரத்து 170 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வங்கி மூலம் நிவாரணத் தொகை டெபாசிட் செய்யப்படும் எனவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக ஏடிஎம்கள் செயல்படாததாலும், பயனாளிகள் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற தாமதமாகும் என்பதாலும், மழை வெள்ளத்தில் வங்கி கணக்கு விவரங்கள், ஏ.டி.எம்களை தொலைந்திருக்கக் கூடும் என்பதாலும், நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
சட்டம் - ஒழுங்கு பிரச்சனை இல்லாமல், ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டதாகவும், மழை வெள்ளத்தால் பலியானவர்களுக்கான இழப்பீடு, பயிர் சேதத்திற்கான இழப்பீடு, கால்நடைகளுக்கான இழப்பீடு, சேதமடைந்த படகுகளுக்கான இழப்பீடுகளை அதிகரித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளி வைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications