மேட்டரே வேற! வீட்டிற்கே போன பூச்சி.. நாசுக்காக "நோ" சொன்ன ரஜினி.. ஸ்டாலின் விழாவிற்கு வராதது ஏன்?
சென்னை: நேற்று முதல்வர் ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவில்லை. நேரில் அழைப்பு சென்றும் கூட அவர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று உங்களில் ஒருவன் என்ற தனது சுயசரிதை புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிட்டார். நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திதான் இந்த விழாவில் புத்தகத்தை திறந்து வைத்து பேசினார்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர் . நடிகர் ரஜினிகாந்திற்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ரஜினி அழைப்பு
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக நியமிக்கப்பட்ட பூச்சி எஸ்.முருகன் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். முதல்வர் ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரும்படி பூச்சி முருகன் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்தார். பெரும் அரசியல் தலைவர்கள், தேசிய தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் ரஜினிகாந்தும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டது பெரும் கவனம் பெற்றது.

ரஜினி இல்லை
அரசியல் ரீதியாக இந்த விழாவில் கலந்து கொள்வதில் ரஜினிக்கு சிக்கல் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சட்டசபை தேர்தலுக்கு முன் ரஜினியுடன் நிலவிய ஒரு சில கசப்புகளும் கூட ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றதும் காணாமல் போய்விட்டது. அதன்பின் ஒரு சில இடங்களில் ரஜினியை அவ்வப்போது ஸ்டாலினை பாராட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் ரஜினி மறுத்ததற்கு காரணமே வேறு என்கிறார்கள்.

அரசியல் காரணமா?
அரசியல் ரீதியாக இந்த விழாவில் கலந்து கொள்வதில் ரஜினிக்கு சிக்கல் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சட்டசபை தேர்தலுக்கு முன் ரஜினியுடன் நிலவிய ஒரு சில கசப்புகளும் கூட ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றதும் காணாமல் போய்விட்டது. அதன்பின் ஒரு சில இடங்களில் ரஜினி அவ்வப்போது ஸ்டாலினை பாராட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் ரஜினி மறுத்ததற்கு காரணமே வேறு என்கிறார்கள்.

ஐஸ்வர்யா விவாகரத்து
ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா விவாகரத்திற்கு பின் பொதுவாக எங்கும் வெளியே செல்லவில்லை. ரஜினி பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட ரஜினி வாக்களிக்கவில்லை. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கும் கூட இப்போது சில pre production பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. அதனால் ரஜினி வெளியே மக்கள் முன் தோன்றுவதை தவிர்த்து வருகிறார். தேவையில்லாத தர்மசங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதால் ரஜினி இப்படி பொது இடங்களை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் வாழ்த்து
இதன் பொருட்டே நேற்று முதல்வர் ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் முதல்வர் ஸ்டாலின் - ரஜினி இடையே இதன் காரணமாக எந்த மனஸ்தாபமும் இல்லை என்கிறார்கள். இன்று முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ரஜினிகாந்த் அதற்கு வாழ்த்தும் கூட தெரிவித்து இருந்தார். அதில், இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று வாழ்த்து கூறியதும் குறிப்பிடத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications