என் உயிர் போனாலும் பரவாயில்லை.. அரசியலுக்கு வருவேனு சொன்ன ரஜினி பின்வாங்கியது ஏன்?
சென்னை: புதிதாக உருமாறிய கொரோனாவின் இரண்டாவது அலை வந்து கொண்டிருக்கும் நிலையில் என்னால் மக்களை சந்தித்து பிரச்சாரங்களை செய்ய முடியாது என்பதால் தான் அரசியல் கட்சியை தொடங்கமாட்டேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வரும் 31-ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். மேலும் ஜனவரி மாதம் அவர் அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் அவரே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்தபோது படக் குழுவினரில் சிலருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா இல்லை. எனினும் ரத்த அழுத்தத்தில் மாறுதல்கள் இருந்தன.

உடல்நிலை
இதையடுத்து அவர் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நேற்று முன் தினம் வீடு திரும்பினார். இந்த நிலையில் வரும் 31-ஆம் தேதி திட்டமிட்டபடி அரசியல் கட்சி குறித்த அறிவிப்புகளை அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ரஜினி அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளார்.

படக்குழு
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையை மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்ற நிலையில் எத்தனை பாதுகாப்பாக இருந்த போதும் படக்குழுவினர் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

எச்சரிக்கை
எனக்கும் ரத்த அழுத்த மாறுதல்கள் இருந்தன. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினேன். எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் பல பேருக்கு வேலையிழப்பும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன்.

உருமாறிய கொரோனா
நான் கட்சி ஆரம்பித்தால் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க இருக்கும். ஆனால் 120 பேர் கொண்ட படக்குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

அரசியல் கட்சி
தடுப்பூசி வந்தால் கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் நான் இந்த நேரத்தில் நான் பிரச்சாரம் செய்தால் என்னை நம்பி என்னுடன் வருவோர் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் தனது அரசியல் கட்சி தொடங்கும் முடிவை அவர் கைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications