கட்சி தொடங்குவாரோ இல்லையோ? அசால்ட் மா.செ.க்களால் அப்செட் ஆன ரஜினி- பின்னணி இதுதானாம்!
சென்னை: ரஜினிகாந்த் அறிவித்தபடி கட்சியை தொடங்குவாரா இல்லையா? என்பது உறுதியாக தெரியாத நிலையில் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ளாததுதான் அவரது ஏமாற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
Recommended Video
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் வழக்கம் போல போயஸ் கார்டனில் நடுத்தெருவில் நின்று ரஜினிகாந்த் பேட்டி கொடுத்தார். அப்போது, மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் தமக்கு ஏமாற்றம் ஏற்பட்டது; அதை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.
மாவட்ட செயலாளர்கள் மீது அதிருப்தி இருந்தால் அதை சரி செய்ய வேண்டியது கட்சி தலைவரின் பொறுப்பை. அதை பொதுவெளியில் ஊடகங்களிடம் ஒரு புலம்பலாக ஒரு தலைவர் முன்வைப்பார்? என்கிற விமர்சனங்கள் ரஜினியை நோக்கி முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசினோம்.

அப்போது, ஓராண்டுக்கு முன்னர் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை வார்டு அளவில் மேற்கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் கூறினார். அதன்பின்னர் கட்சி தொடங்குவதற்கான எந்த சமிக்ஞையும் ரஜினிகாந்திடம் வெளிப்படவில்லை.

இதனால் கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் மன்ற நிர்வாகிகளும் ஆர்வம் காட்டவில்லை. இன்று திடீரென வந்து அடிப்படை கட்டமைப்புகள் குறித்து கேள்வி கேட்டார் ரஜினி. உள்ளது உள்ளபடியே பல நிர்வாகிகளும் எந்த பணியும் முடிக்கவில்லை என தெரிவித்தனர். இதனால்தான் ரஜினிகாந்த் ஏமாற்றமடைந்தார். இதனைத்தான் ஊடகங்களிடமும் ரஜினிகாந்த் வெளிப்படையாக கூறியிருக்கிறார் என்கின்றனர்.
ஆரம்பமே படுஜோருதானப்பு!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications