48 ஆண்டுகளாக.. ராமநாதபுரத்தில் நடக்காத அதிசயம்.. பூரித்து போய் அரசுக்கு நன்றி சொன்ன மக்கள்
சென்னை: 48 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாயில் செல்லும் தண்ணீர் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடாமல் கனமழை பெய்தது. சுமார் 10 செமீ அளவிற்கு பல இடங்களில் விடாமல் மழை பெய்தது.

தமிழ்நாடு முழுக்க இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை , திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27-11-2023ம் தேதி காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உவைாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து 28-11-2023 காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவியது.
வானிலை ரிப்போர்ட்: இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும்.
தென்இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
01.12.2023: : தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை தண்ணீர் வருகை; இந்த நிலையில்தான் 48 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாயில் செல்லும் தண்ணீர் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். சரியாக நடந்த தூர்வாரும் பணிகள் காரணமாக தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் பார்த்திபனூரில் வைகை ஆற்றின் குறுக்கே 1975ம் ஆண்டு கட்டப்பட்ட மதகு அணையில் இருந்து ஆர்.எஸ். மங்கலம் வரையில் 45 கி.மீ தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளதால் வைகை நீர் தங்குதடையின்றி செல்கிறது. புதர் மண்டிக்கிடந்த இந்த கால்வாய், தமிழ்நாடு பாசன வேளாண் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், உலக வங்கி நிதியுதவியுடன் ₹52.50 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. இதன் காரணமாக தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
1975ல் வைகை ஆற்றின் குறுக்கே கலைஞர் கருணாநிதியால் மதகு அணை கட்டப்பட்டது. பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து 43 கி.மீ நீளமுள்ள வலது பிரதான கால்வாய் மூலம் 154 கண்மாய்களும், 45 கி.மீ நீளமுள்ள இடது பிரதான கால்வாய் மூலம் 87 கண்மாய்களும் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த கால்வாய்கள் அமைக்கப்பட்டதில் இருந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், ₹52.50 கோடி மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணிகள் செய்யபட்டது. .
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்: புழல் ஏரியில் இருந்து 2வது நாளாக 2000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம். நீர்இருப்பு 3006 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 985 கனஅடியாக அதிகரிப்பு. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்.
சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வெளியேற்றப்படும் உபரிநீர் 350 கனஅடியில் இருந்து 600 கனஅடியாக அதிகரிப்பு. நீர்இருப்பு 816 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 242 கனஅடியாக சரிவு. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 470 மில்லியன் கனஅடியாக உள்ளது.












Click it and Unblock the Notifications