சசிகலா அமமுகவை வெளிப்படையாக ஆதரித்திருந்தால்.. நிலைமையே வேறு.. இதில் இப்படி ஒரு ட்விஸ்டா?
சென்னை: அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்ட நிலையில், டிடிவி தினகரனின் அமமுகவிற்கு இதுவரை வெளிப்படையாக ஆதரவு கொடுக்காதது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அமமுகவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால், அதிமுகவிற்கு உரிமை கொண்டாடி வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என்பதால் சசிகலா ஆதரவு கொடுக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி பிரபல ஊடகமான பிபிசிக்கு கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்ட டிடிவி தினகரன், அதன் பிறகு அமமுக என்ற கட்சி ஆரம்பித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 5.5 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அமமுக பிரித்த வாக்குகள் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்க நேரிட்டது.

சசிகலா விலகல்
இதற்கிடையே கடந்த 2019ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் லோக்சபா தேர்தலில் பெற்றதைவிட கணிசமான அளவிற்கு வாக்குகளை பெற்று அசத்தியது. இதனால் உற்சாகம் அடைந்த டிடிவி தினகரன் சட்டசபை தேர்தலுக்கான தீவிரமாக வேலை செய்ய தொடங்கினார். சசிகலா வருகை டிடிவி தினகரனுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்தது. சசிகலா அதிமுக அமமுகவை இணைக்க முயற்சி செய்தார் அது முடியவில்லை. இதனால் சசிகலா அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்துவிட்டு ஒதுங்கிவிட்டார்.

தினகரன் புதிய கூட்டணி
இதன்பிறகுதான் டிடிவி தினகரன் புயல் வேகத்தில் செயல்பட தொடங்கினார். அதுவரை அதிமுக இணைப்பு சாத்தியமில்லை என்பது தெரிந்த உடன் கூட்டணிக்கும் முயற்சித்தாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு அதிமுக மேல்மட்ட தலைவர்கள் உடன்படவில்லை. இதையடுத்து தே.மு.தி.க, தனி அணியாக களம் காண முடிவு செய்து எஸ்.டி.பி.ஐ, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்திருக்கிறது.

அமமுக அதிரடி
தென்மாவட்டங்களில் டிடிவி தினகரனுக்கு அதிமுகவின் கணிசமான வாக்குகள் பிரிந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. இது ஒருபுறம் எனில் அதிமுகவில் சீட் கிடைக்காதவர்கள் அமமுக பக்கம் சாய்வது இந்த தேர்தலில் அதிகரித்துள்ளது. இதனால் எப்படியும் குறிப்பிட்ட அளவு தொகுதியில் வெல்ல முடியும் என்ற நம்பக்கையில அமமுகவினர் உள்ளனர். அதற்கு தகுந்தார் போல் களத்தில் திமுக, அதிமுவுக்கு நிகராக இறங்கி வேலை செய்தும் வருகிறார்கள். இந்த கூட்டணி எந்த அளவிற்கு வாக்குகளை பெற போகிறது என்ற பரபரப்பு தற்போது நிலவுகிறது.

அமமுகவிற்கு ஆதரவு
இந்நிலையில் சசிகலாவின் மானசீக ஆதரவு தனக்குத்தான் என்று டிடிவி தினகரன் அண்மையில் கூறினார். ஆனால் இதுவரை சசிகலா ஒருமுறை கூட அமமுகவை பற்றி பேசவில்லை. அவர்களுக்கு ஆதரவு தருவதாக சொல்லவிலலை. ஏன் இதுவரை அவர் அமமுகவிற்கு ஆதரவு தெரிவக்கவில்லை என்பது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி பிரபல ஊடகமான பிபிசிக்கு பேட்டி அளித்த போது விளக்கம் அளித்தார்.

ஏன் அறிவிக்கவில்லை
இது தொடர்பாக அவர் கூறுகையில், நாங்கள் ஓர் இயக்கம் ஆரம்பித்துவிட்டதால், தினகரன் அதிமுகவிற்கு உரிமை கோர முடியாது. அந்த வழக்கை சின்னம்மா தொடர்ந்து நடத்துவார். அந்த வழக்கில் உறுதியாக வெற்றி பெறுவார், இரட்டை இலை என்பது இப்போது வில்லன்களின் கைகளில் இருக்கிறது. அதை உணர்ந்துதான் சின்னம்மா விலகியிருக்கிறார். பணம் சம்பாதிக்க மட்டுமே அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இரட்டை இலை இருக்கிறது. அதை மீட்க வேண்டிய கடமை அ.ம.மு.கவுக்கு உள்ளது. அ.ம.மு.கவுக்கு சசிகலா தார்மீக ஆதரவு கொடுத்தால், அ.தி.மு.க மீதான அவரது உரிமை போய்விடும். அ.தி.மு.க மீதான சட்டப்படி வழக்கு நடக்கும்போது இன்னொரு இயக்கத்துக்கு அவர் ஆதரவு கொடுக்க முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications