கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விஷம் குடித்த நடிகர் லோகேஷ்.. தற்கொலைக்கு காரணம் என்ன? பரபர தகவல்
சென்னை: ஜீ பூம்பா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
மர்ம தேசம், ஜீ பூம்பா, விடாது கருப்பு உள்ளிட்ட சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து 90 ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பிரெண்டாக இருந்தவர் நடிகர் லோகேஷ்.
இவருக்கு இயக்குநர் பணியில் அதீத ஆர்வம் இருந்ததாக சொல்லப்படுகிறது. சில குறும்படங்களையும் இவர் இயக்கியுள்ளாராம். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் லோகேஷ் மயங்கிய நிலையில் கிடந்ததாக தெரிகிறது.

விஷம்
அவரை மீட்ட போலீஸார் அவர் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடப்பதை அறிந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

மருத்துவமனை
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின்படி கோயம்பேடு போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளார்கள். லோகேஷுக்கு திருமணமாகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து காஞ்சிபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தாராம். இதையடுத்து லோகேஷின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மாடம்பாக்கம்
அப்போது லோகேஷின் பெற்றோர் கூறுகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு அனிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு லோகேஷும் அனிஷாவும் மாடம்பாக்கத்தில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்படும். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு முற்றியது.

மனமுடைந்து தற்கொலை
இதையடுத்து அனிஷா லோகேஷிடம் இருந்து விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது லோகேஷுக்கு பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் தந்தது என்றனர் அவரது பெற்றோர். இதையடுத்து விவாகரத்து விஷயத்தால் மனமுடைந்து லோகேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர்.

கோயம்பேடு பேருந்து நிலையம்
மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் ஒரு வேளை பஸ் நிலையத்தில் வைத்து அனிஷாவை அவர் பார்த்தாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது போல் வேறு ஏதேனும் பிரச்சினைகள் லோகேஷிற்கு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications