டெல்லிக்கு பறந்த "நோட்ஸ்".. ஒன்று விடாமல் புட்டு புட்டு வைத்த "ராம்குமார்".. திரும்பி பார்த்த பாஜக
சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஒன்றுவிடாமல் தினந்தோறும் சிவாஜி மகன் ராம்குமார் ஆங்கிலத்தில் நோட் போட்டு அனுப்பி வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் திடீரென சீனில் வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது மகன் துஷ்யந்துடன் இணைந்தார். பாஜகவில் அவர் தற்போது வரை எந்த பதவியிலும் வகிக்கவில்லை. அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார்.
இந்த நிலையில் ராம்குமார் டெல்லியில் உள்ள மூத்த பாஜக தலைவர்களுக்கு தமிழக அரசியல், கள நிலவரம், உள்ளிட்ட விஷயங்களை ஆங்கிலத்தில் புட்டு புட்டு வைத்து வருகிறாராம்.

ரெகுலர்
இந்த வேலையை அவர் ரெகுலராக செய்வதாக தெரிகிறது. மேலும் அண்மையில் தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் தொடர்பான எதிர்ப்பு, முதல்வரை ஆதீனங்கள் சந்தித்தது, பட்டினப்பிரவேசத்திற்கான தடையை தமிழக அரசு நீக்கியது உள்ளிட்டவை குறித்தெல்லாம் விவரமாக டெல்லி சீனியர்களுக்கு புரியும் வகையில் ஆங்கிலத்தில் அனுப்பி வந்துள்ளார்.

வாரணாசி
அது மட்டும் அல்லாமல் வாரணாசி விஸ்வநாதர் கோயில் ஆலயம் குறித்தும் அவர் பல ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றையும் டெல்லி பாஜகவுக்கு அனுப்பியிருந்தாராம். இதனால் இவருக்கு டெல்லி பாஜக போன் போட்டு பாராட்டுகளை தெரிவித்து வருகிறதாம். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதுகூட ராம்குமார் இப்படி சீனியர்களுடன் இணக்கம் காட்டியதில்லையாம்.

அறிக்கை
இவை எல்லாவற்றுக்கும் மேல் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு!. கடந்த ஜனவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் முத்தரசன் , சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அவர் வாங்கிய செவாலியர் பட்டத்தை திருப்பிக் கொடுத்து மோடிக்கு வழங்கச் சொல்லியிருப்பார் என விமர்சனம் செய்திருந்தார்.

6 மாதங்கள் கழித்து பதிலடியா
இதற்கு கிட்டதட்ட 6 மாதங்கள் கழித்து ராம்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அதில் தனது தந்தை சிவாஜி, தனது உடல், பொருள்,புகழ் ஆகியவற்றை, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாட்டுக்காக அர்ப்பணித்தவர். நேர்மை, திறமை, கடின உழைப்பு காரணமாக, அவருக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது. பல விருதுகளும் கிடைத்தன. எனவே, அவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சிவாஜி இன்று இருந்திருந்தால், பிரதமர் மோடியையும், பாஜகவையும் ஆதரித்திருப்பார். உலக அரங்கில் மோடியால் பாரதம் தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்திருப்பார் என கூறியதுடன் அரைகுறை ஞானம் ஆபத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திடீர் அறிக்கை
மேலும் எனது தந்தை சிவாஜி கணேசனைப் பாராட்டுவதை வரவேற்கிறோம். ஆனால், பிறரைத் தரமின்றி விமர்சிப்பதற்கு அவரது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். கட்சியில் சேர்ந்ததோடு சரி இதுவரை வெளிப்படையாக ராம்குமார் எதையும் செய்யாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென சீனுக்கு வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

நோட் போட்டு டெல்லி
தினந்தோறும் நோட் போட்டு டெல்லிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வரும் ராம்குமார், மெல்ல மெல்ல சீனுக்கு வந்து ஏதேனும் முக்கிய பதவிக்கு குறி வைக்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. தொழில்நுட்பங்கள் பெருகி வரும் நிலையில் ஒருவர் விமர்சனம் செய்த அடுத்த நிமிடமே பதில் விமர்சனம் அளித்து வரும் காலத்தில் இப்படி 6 மாதமாக "தூங்கிவிட்டு" இப்போது பதில் அறிக்கையா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்புகிறார்கள்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications