”கழுதை”ஒப்பீடு.. பவ்வியமான பன்னீர் அண்ணாமலை மீது பாய்ந்தது ஏன்? மனசுல இருந்த 3 பாரங்களை கொட்டிட்டாரே
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜக தலைவர்கள் தொடர்பாக எந்த விமர்சனமும் முன்வைக்காமல் இருந்த நிலையில் இன்று அண்ணாமலையை கடுமையாக சாடியதன் பின்னணியில் 3 காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்று ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட 4 பக்க அறிக்கையில், "அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பற்றியும் தரக்குறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்கள் விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் 'டைம்ஸ் ஆப் இந்தியா' என்கிற ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இந்தப் பேச்சு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் பாவித்து தன் வாழ்க்கையை தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.
அன்னை இந்திராகாந்தி, திரு. ராஜிவ்காந்தி, திரு. பி.வி. நரசிம்மராவ், திரு. தேவகவுடா, திரு. அடல் பிஹாரி வாஜ்பாய், திரு. எல்.கே. அத்வானி, டாக்டர் மன்மோகன் சிங், திரு. சந்திரசேகர், திரு. ஹர்கிஷன் சிங் சுர்ஜித், திரு. ஜோதி பாசு, திரு. ஏ.பி. பரதன், திரு. என். சந்திரபாபு நாயுடு, திரு. முலாயம்சிங் யாதவ், திரு. லாலு பிரசாத் யாதவ், செல்வி மம்தா பானர்ஜி, திரு. நவீன் பட்நாயக், பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி என அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாண்புமிகு அம்மா அவர்களிடம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர்.

மாண்புமிகு அம்மா அவர்களும் அனைவரின் மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். பல அரசியல் கட்சித் தலைவர்கள் மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லமான போயஸ் தோட்டத்திற்கு வந்து சென்றுள்ளனர். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காதிருந்தால், மாண்புமிகு அம்மா அவர்கள் இந்தியத் திருநாட்டின் பிரதமராகவே பொறுப்பேற்றிருப்பார்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களிடம் இருந்த ஆளுமைத் திறன், பன்மொழித் திறன், முடிவெடுக்கும் திறன், கட்சி வித்தியாசமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாண்புமிகு அம்மா அவர்கள் மீது வைத்திருந்த மதிப்பு ஆகியவைதான் இதற்கான காரணங்கள்.
இப்படிப்பட்ட உலகம் போற்றும் உன்னதத் தலைவரை, மறைந்தாலும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒப்பற்ற தலைவரை, இந்தியத் திருநாடே வியந்து பார்த்த வீரம் மிக்க தலைவரை, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாம் புரட்சித் தலைவி அம்மா அவர்களையும், அவருடைய ஆட்சியையும் தரக்குறைவாக திரு. அண்ணாமலை அவர்கள் விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
மாண்புமிகு அம்மா அவர்களின் 1991-1996 ஆண்டு ஆட்சி முடிவடைந்தவுடன், மாண்புமிகு அம்மா அவர்களை அரசியலிலிருந்து ஓரம் கட்ட வேண்டும் என்ற தீயநோக்கத்தின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களால் பொய் வழக்குகள் பல புனையப்பட்டன. அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.
மாண்புமிகு அம்மா அவர்கள் இந்த மண்ணை விட்டு விண்ணுலகத்திற்கு சென்றபோது அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அவர் நிரபராதியாகத்தான் இந்த மண்ணை விட்டுச் சென்றார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம். உண்மையை உணராமல், மனம் போன போக்கில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் திரு. அண்ணாமலை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து பாஜக தலைமையை நம்பி வந்த நிலையில், அனைத்துமே எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே முடிந்தது. அப்போது கூட ஓபிஎஸ் பாஜகவை விமர்சிக்காமல் அமைதியாகவே இருந்தார். கடந்த மார்ச் மாதம் ஜெயலலிதாவை தனது மனைவி, தாயோடு ஒப்பிட்டு அண்ணாமலை பேசியபோதும் ஓபிஎஸ் வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது அவர் கொந்தளித்து இருப்பதற்கு காரணம் சென்னை வந்த அமித்ஷா, தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்பதுதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போதும் எடப்பாடி தரப்பு வேட்பாளருக்கு ஆதரவாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற சொன்னது அண்ணாமலை என்று கூறி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் காரைக்குடியில், கண்டன தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
தொடர்ந்து அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கே ஆரம்பக்கட்டத்தில் இருந்து ஆதரவாக செயல்பட்டு வருவதாக கருத்து நிலவி வருகிறது. அமித்ஷா உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் தன்னை கண்டுகொள்ளாததற்கு அண்ணாமலையே காரணம் என்ற எண்ணம் ஓபிஎஸுக்கு இருக்கலாம் என்றும் அதன் காரணமாகவே மொத்த கோபத்தையும் அறிக்கையில் கொட்டித் தீர்த்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications