அப்பதான் கட்சியில் சேர்ந்தார் சரத்.. அதுக்குள்ள இப்படி உள்ளடியா.. "ஜெர்க்" ஆன கமல்.. அப்செட்டான சமக!

சரத்குமார் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமக தலைவர் சரத்குமார் ஏன் இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று கசிந்துள்ளது..!

இந்த முறை, அதிமுகவிடம் ஆரம்பத்தில் இருந்தே பிடிவாதம் காட்ட தொடங்கியது சமக.. "எங்களை மதிச்சு வந்து, சீட் தந்தால் கூட்டணிக்கு ஓகே.. அதைவிட்டுட்டு ஒரு சீட், 2 சீட் தந்தால் ஏற்க மாட்டோம்.. எங்கள் பலத்தை அறிந்து சீட் தர வேண்டும்..

நாங்கள் இத்தனை காலம் கூட்டணி அமைத்து போட்டியிடவேதான் எங்கள் தனித்தன்மை வெளியே தெரியாமல் போய்விட்டது" என்று பேட்டி தந்துகொண்டே இருந்தார் சரத்குமார். ஆனால், அதிமுக கண்டுகொள்ளவில்லை. பிறகு திடீரென சசிகலாவை போய் சந்தித்து பேசினார் சரத்குமார்.. இதை பார்த்தும் அதிமுக கண்டுகொள்ளவில்லை..

 37 சீட்

37 சீட்

இறுதியில் வேறு வழியில்லாமல் கமலை போய் சந்தித்து கூட்டணி வைத்தார்.. எடுத்த எடுப்பிலேயே 40 சீட் என்று அள்ளிக் கொடுத்து அதிர வைத்தார் கமல்.. ஆனால் கடைசியில் முக்கி முக்கி 37 வேட்பாளர்களை மட்டுமே தேற்ற முடிந்தால் மிச்சம் இருந்த 3 சீட்டையும் மநீமவிடமே திருப்பிக் கொடுத்து விட்டார் சரத்குமார். கூட்டணி மற்றும் சீட் விஷயத்தில் அதிமுகவிடம் அந்த அளவுக்கு கெடுபிடி காட்டிய சரத்குமார் தேர்தலில் போட்டியிடவில்லை.. இவரும் சரி, ராதிகாவும் சரி.. 2 பேருமே போட்டியிடவில்லை. தேர்தலில் தங்கள் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டி உள்ளதால், போட்டியிட முடியவில்லை என்ற காரணம் சொல்லி உள்ளார்கள்.

 ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

ஆனால், நிஜமாகவே சரத்குமார் ஏன் போட்டியிடவில்லை? 37 சீட் லட்டு போல தூக்கி தந்தும் என்ன தயக்கம்? என்ற கேள்விகள் இன்னமும் அடங்கவில்லை.. ஒரு கட்சி தலைவரே தேர்தலில் போட்டியிடாமல் போனால், மற்ற வேட்பாளர்களுக்கு எப்படி நம்பிக்கை தரும்? முன்மாதிரியாக வந்து களத்தில் குதிக்க வேண்டாமா? ஒருவேளை அதிமுக கூட்டணியில் 2 சீட் ஒதுக்கியிருந்தால், இப்படித்தான் சரத்குமாரும் ராதிகாவும் போட்டியிடாமல் இருந்திருப்பார்களா? என்ற வாதங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன.

 விருதுநகர்

விருதுநகர்

ஆனால் சரத்குமார் ஏன் போட்டியிடவில்லை என்ற தகவல் லேசாக தற்போது கசிந்துள்ளது.. விருதுநகரில் நிற்கப்போவதாக சொல்லிதான் அந்த தொகுதியை சரத்குமார் கேட்டாராம்.. அதாவது சமுதாய வாக்குகள் பெருமளவில் விழக்கூடும் என்பதற்காகவே விருதுநகரை கேட்டதாக தெரிகிறது.. ஆனால், அங்கு சமகவுக்கு தொண்டர்கள் பெருமளவில் இல்லையாம்..

 மய்யம்

மய்யம்

அதேசமயம் கமலின் மய்யத்துக்கு வெகுவாக ஆதரவு அந்த தொகுதியில் உள்ளதாக தெரிகிறது. இதனால், சரத்துக்கு அந்த தொகுதியை ஒதுக்கினால், நாங்கள் ராஜினாமா செய்துவிடுவோம் என்று உள்ளூர் மய்ய நிர்வாகிகளும் டென்ஷனாகி சொன்னார்களாம்.. இதுதான் கமலுக்கு கொஞ்சம் ஜெர்க் ஆகி உள்ளது போலும்.

 முணுமுணுப்புகள்

முணுமுணுப்புகள்

ஒருவேளை சமகவுக்கு அந்த தொகுதியை ஒதுக்கிவிட்டால், எங்கே மய்யத்து நபர்கள் வேலை செய்யாமல் போய்விடுவார்களோ என்று நினைத்துதான், சரத்குமாரே தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி கொண்டதாகவும் சொல்கிறார்கள்... இந்த தகவல் உண்மையா என்று தெரியவில்லை.. இருந்தாலும் 37 பேரை நிறுத்தும் ஒரு கட்சி தலைவர் இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்காலாமே என்ற முணுமுணுப்புகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+