மூதாட்டிங்க கூட்டம்.. சிஎஸ்கே டிக்கெட் வாங்க லைனில் நின்றது ஏன் தெரியுமா? ஷாக்கடிக்க வைக்கும் காரணம்
சென்னை: கடந்த சிஎஸ்கே போட்டியை சென்னையில் காண பெரிய அளவில் மக்கள் கூட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் வரிசையில் நின்றது. இதில் நடந்த சம்பவம் ஒன்று பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஐபிஎல் 2023 சீசன் தொடங்கியதில் இருந்தே சென்னை அணி மீது ஒரு முக்கிய காரணத்திற்காக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அது டிக்கெட் விவகாரம்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகளுக்கு ஆப்லைன், ஆன்லைன் டிக்கெட்டுகள் முறையாக விற்பனை செய்யப்படுவது இல்லை என்ற கடுமையான புகார்கள் உள்ளன.
100 சதவிகித டிக்கெட்டில் 70 சதவிகித டிக்கெட் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. மீதம் உள்ள 30 சதவிகிதம் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
காப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள், பிரபலங்களுக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. அல்லது இந்த டிக்கெட்டுகள் பார்க்க ஆள் இல்லாமல் அப்படியே வேஸ்ட்டாகிறது.
இதனால் சிஎஸ்கே போட்டிகளில் மக்கள் பார்க்க ஆர்வமாக இருந்தும் கூட மைதானத்தில் கூட்டம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.
டிக்கெட்: இதனால் இருக்கிற 30 சதவிகித டிக்கெட்டுகளை வாங்க மக்கள் கடுமையாக முண்டியடிக்க தொடங்கி உள்ளனர். அதிகாலையிலேயே 4 மணிக்கு வந்து பலர் லைனில் நிற்கிறார்கள்.
லைனிலேயே சண்டை நடப்பது, போலீஸ் தடியடி நடத்துவது போன்ற சம்பவங்களும் நடக்க தொடங்கி உள்ளன. அதிலும் கடந்த முறை பலர் மயக்கம் போட்டு விழுந்து ஆம்புலன்ஸ் வரும் அளவிற்கு நிலைமை மோசமானது குறிப்பிடத்தக்கது.
டிக்கெட் விற்பனையில் பல குளறுபடிகள் நடப்பதால் பிளாக்கில் டிக்கெட் 8 - 10 ஆயிரம் ரூபாய்க்கு கூட விற்பனை ஆகி வருகிறது.

முதியவர்கள்: இந்த நிலையில்தான் கடந்த இரண்டு சேப்பாக்கம் போட்டிகளிலும் டிக்கெட் வாங்க அதிகாலையில் இருந்து சில மூதாட்டிகள் லைனில் நின்றனர். முக்கியமாக 60-70 வயது மூதாட்டிகள், சாலை ஓரம் கடை நடத்தும் மூதாட்டிகள் அங்கே லைனில் நின்று டிக்கெட் வாங்குகிறார்கள். டிக்கெட் வாங்க மற்றவர்கள் வெளியில் இருந்து வர வேண்டும். ஆனால் அங்கே வசிக்கும் சில மூதாட்டிகள் அதிகாலையில் எல்லோருக்கும் முன் லைனில் வந்து நிற்கின்றனர்.
மூதாட்டிகள் மட்டுமின்றி பல பெண்கள் அந்த பகுதியில் இப்படி வரிசையில் நின்று டிக்கெட் வாங்குகிறார்கள். அவர்கள் இப்படி டிக்கெட் வாங்குவது ஏன்? அவர்கள்தான் உண்மையில் டிக்கெட் வாங்கி பார்க்க போகிறார்களா என்பது தொடர்பாக அப்பகுதி மக்கள் இடையே விசாரித்தோம்.
இந்த விவகாரம் அங்கே புதிய பிஸ்னஸ் மாடலாகி உள்ளது. அதன்படி அதிகாலையிலேயே இவர்கள் டிக்கெட்டை காசு கொடுத்து வாங்கி விடுவார்கள். அதன்பின் மாலை நேரத்தில் டிக்கெட் எல்லாம் தீர்ந்த பின் அதிக காசுக்கு இதை ரசிகர்களுக்கு விற்கிறார்கள்.
டிக்கெட் கிடைக்காத ரசிகர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் இவரகள் விற்பனை செய்கிறார்கள். சேப்பாக்கத்தில் நடக்கும் சிஎஸ்கே போட்டிகளுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிக கிராக்கி உள்ளது.
தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என்பதால் அதை பார்க்க லட்சக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கிவிட்டனர்.
தோனியும்.. எனக்கு ஃபேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது கிரிக்கெட் உலகில் வைரல் விவாதமாக மாறிவிட்டது.
அதனால் ரசிகர்கள் அதிக அளவில் மேட்சை பார்க்க வருகிறார்கள். இதை பயன்படுத்திக்கொண்டு அங்கே இருப்பவர்களும் டிக்கெட்டை முன்பே வாங்கி வைத்துக்கொண்டு அதை கூடுதல் விலைக்கு விற்று பிஸ்னஸ் செய்கிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications