சிறப்பு எஸ்எஸ்ஐ வில்சன் கொல்லப்பட்டது ஏன்? கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்
Recommended Video
சென்னை: களியக்காவிளை எஸ்ஐ வில்சனை கொன்றது ஏன் என விசாரணையில் கொலையாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளிகள் கேரளத்தில் தலைமறைவாகினர்.
இந்த நிலையில் கொலையாளிகளின் புகைப்படங்களை வெளியிட்ட காவல் துறை அவர்களை பிடித்து கொடுத்தால் ரூ 7 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்தது.

இருவர் கைது
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியிட்டனர். தமிழகம் மற்றும் கேரளா மாநில போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் கொலையாளிகள் அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

வில்சன்
இருவரும் தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்ட போலீஸார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வந்ததால் வில்சனை சுட்டுக் கொன்றதாக அவர்கள் கூறினர்.

தகவல்கள்
போலீஸார் தங்களை என்கவுன்ட்டர் செய்யக் கூடும் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் வில்சனையும் கொன்றதாகவும் வாக்கு மூலத்தில் கூறியுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்
இன்று காலை 11 மணிக்கு இவர்கள் இருவரும் குளித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த கொலையில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications