Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதான் சூட்சமம்! இந்தியா முழுக்க பணவீக்கம் உயர்ந்த போது.. தமிழ்நாடு தப்பியது எப்படி? பிடிஆர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் சில்லறை வர்த்தக பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பணவீக்கம் குறைவாக இருப்பது எப்படி என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி ஒன்றில் விளக்கி உள்ளார்.

இந்தியாவில் மாத மாதம் பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம்' (NSO) இந்தியாவில் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் புதிய உச்சம் தொட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் அதே சமயம் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பணவீக்கம் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

இந்திய முழுக்க தேசிய பணவீக்க விகிதம் 7.8 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் மிக மோசமான பணவீக்க விகிதங்களில் இதுவும் ஒன்றாகும். இது கடந்த ஏப்ரல் மாத நிலவரம். அதே சமயம் தமிழ்நாட்டில் தேசிய அளவை விட பணவீக்கம் மிகவும்குறைவாகவே உள்ளது.தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.4 சதவிகிதமாகவும் இருக்கிறது. கேரளாவின் பணவீக்கம் 5.1 சதவிகிதமாக உள்ளது.

ஒன்றிய அரசு

ஒன்றிய அரசு

இந்த நிலையில் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளின் விளைவுகள், தமிழ்நாட்டில் பணவீக்கத்தின் தாக்கம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஃப்ரண்ட்லைன் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்ட விஷயங்களை தனது ptrmadurai.com பக்கத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிறார்.

பிடிஆர்

பிடிஆர்

அந்த பேட்டியில் பிடிஆர் குறிப்பிட்ட சில முக்கிய விவரங்கள் பின்வருமாறு.. பணவீக்கம் என்பது மிகவும் சிக்கலான விஷயம். பணவீக்கத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கலாம். ஒன்று தேவை உந்துதல் பணவீக்கம். மற்றொன்று, மறைக்கபட்ட தேவை அல்லது விநியோக பக்க அதிர்ச்சிகள் அல்லது இயல்பான சுழற்சியில் ஏற்படும் சில பிறழ்வுகள் எனலாம்.... இந்தியாவின் ஆற்றலின்(எரிபொருள்) பெரும்பகுதி இறக்குமதி செய்யப்படுகிறது எனவே எண்ணெய் விலை உயர்வு நமது பணவீக்கத்தை அதிகப்படுத்துகின்றன, ஏனெனில் அரசாங்கம் அந்த விலை உயர்வை நேரடியாக நுகர்வோர் மீது சுமத்துகிறது. எரிபொருள் ஒவ்வொரு பெரிய தொழிற்துறையிலும் உள்ளீடு செலவாகவும் உள்ளது.

பணவியல் கொள்கை

பணவியல் கொள்கை

அந்தக் கண்ணோட்டத்தில், கடந்த 10, 15 ஆண்டுகளில் மரபுவழியிலான பணவியல் கொள்கை இன்னும் உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்துவிட்டதா என்ற வாதம் நடைபெறுவதாக நான் கருதுகிறேன் - பணவீக்கத்தைத் தூண்டாமல் நீங்கள் வரம்பற்ற அளவு பணத்தை அச்சிட்டுக் கொண்டே இருக்கலாம். இது முன்னெப்போதும் கண்டிராத நிகழ்வு - கோவிட்-க்கு முன்னரும், பின்னரும் பல டிரில்லியன்கள் அளவுக்கு அதிகப்படியான பணப்புழக்கம் உண்டாக்கப்பட்ட பின்னரும் அவை பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கவில்லை.

பிடிஆர் பேட்டி

பிடிஆர் பேட்டி

அது ஏன் நடக்கவில்லை என்பதற்கான கோட்பாட்டில் இரண்டு கூறுகள் உள்ளன. முதலாவதாக, எவ்வளவு அதிகப்படியான பணப்புழக்கம் செலுத்தப்பட்டாலும், அதை செலவழிக்கக்கூடிய மக்களின் கைகளுக்கு அது செல்லவில்லை. முதலீடு செய்யக்கூடியவர்களின் கைகளுக்கு மட்டுமே அது போய்க் கொண்டிருந்தது. எனவே, அதிக பணம் வசதிபடைத்தவர்களுக்கு சென்றது, நடுத்தர மற்றும் ஏழைகளுக்களிடம் பணம் மிகவும் குறைவாக இருந்தது. பணம் வசதிபடைத்தவர்களுக்கு போனால், அவர்களால் செலவு செய்ய முடியாது. செலவு செய்தாலும் அவை சொத்துக்கள், கலை மற்றும் பங்குகள் போன்றவற்றில் இருக்கும்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இது நுகர்வோர் செயல்முறையை பாதிக்காது. ஆனால், சந்தை மதிப்பீடுகளை பாதிக்கிறது; சொத்து விலையை பாதிக்கிறது. இது உண்மையான பொருளாதார நடவடிக்கைக்கு வழிவகுக்கவில்லை. பணவியல் கொள்கையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களைப் பயன்படுத்தலாம், ஆனால் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு பணவியல் கொள்கையைப் பயன்படுத்துவது மிகவும் கடினம். எவ்வளவு பணப்புழக்கம் செலுத்தப்பட்டாலும், பொருளாதார நடவடிக்கை எதுவும் நடக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. பணபுழக்கம் உற்பத்தி அல்லது புதிய நிறுவனங்கள் அல்லது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பயன்படவில்லை.

திடீரென அதிகரிப்பு

திடீரென அதிகரிப்பு

தற்போது திடீரென பணவீக்கம் அதிகரித்துள்ளது. உலகளாவிய பணவீக்கத்தில் ஒரு பெரிய உயர்வு ஏன் ஏற்பட்டுள்ளது, வேலையின்மை எண்ணிக்கை எப்போதும் குறைவாக இருக்கும் அமெரிக்கா போன்ற ஒரு இடத்தில் கூட ஏன் இது ஏற்பட்டுள்ளது? உண்மையில் பணியாளர்களுக்கான கடுமையான போட்டி உள்ளது, பொருளாதாரத்தில் ஒரு பெரிய துள்ளல் ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக ஊதியம் உயர்த்தப்படுகிறது மற்றும் அதன் காரணமாக பாரம்பரிய பணவீக்க சுழற்சியின் அடிப்படையில்- செலவழிக்க விரும்பும் மக்களின் கைகளில் பணம் உள்ளது. இத்துடன், கொவிட் ஏற்படுத்திய வழங்கல் பக்க அதிர்ச்சியும் இணைந்துள்ளது... எனினும் இது கோவிட் ஆண்டுகளில் இருந்த அளவிற்கு மோசமாக இல்லை.

எண்ணெய் உற்பத்தி

எண்ணெய் உற்பத்தி

இந்தியா எண்ணெய் உள்ளட பொருட்களின் பெரிய இறக்குமதியாளராக உள்ளது, அவற்றின் விலைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இடுபொருள்களுக்கான செலவுகள் உயர்ந்து, பால், காய்கறிகள் போன்றவற்றின் விலை உயர்வுக்கு வழிவகுத்தது, மேலும், வழங்கல் பக்க அதிர்ச்சி தெளிவாக தெறிக்கின்றது. தமிழ்நாடு போன்ற ஒரு இடத்தில் மாநில அரசு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு பல நன்மைகளை வழங்குவதால், பணவீக்கத்தின் விளைவுகளை சில வழிகளில் தணித்து வருகிறோம் .

சுகாதாரம்

சுகாதாரம்

சுகாதாரம், உள்கட்டமைப்பு, கல்வி போன்ற துறைகளுக்கான திட்டங்களால் .. எனவே இங்கு விளிம்பு நிலையில் மக்கள் அதிக எண்ணிகையில் இல்லை. பலர் ஒப்பீட்டளவில் நன்றாக வாழ்கின்றனர், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, குறைந்த பட்சம் மற்ற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தின் தனித்துவமாக பார்க்கமுடிவது, செல்வப் பங்கீட்டின் அடிப்படையில் ஒப்பீட்டளவில் குறைவான வேறுபாடுகள் கொண்ட சமூகமாக தமிழ்நாடு உள்ளது. நாங்கள் முழுமை பெற்றவர்கள் என்று நான் கூறவில்லை, ஆனால் ஏற்றத்தாழ்வை குறிக்கும் கினி கோயபிசியன்ட் மகாராஷ்டிரா அல்லது குஜராத்தில் இருப்பதை விட குறைவாக உள்ளது. இதன் பொருள் உண்மையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப்பெறாதவர்கள் அல்லது கூடுதல் வேலையைச் சார்ந்தவர்கள் என யாரும் இல்லை. எனவே, நுகர்வு இங்குஅதிகமாக உள்ளது. நுகர்வு ஏற்கனவே அதிகமாக இருக்கும்போது, பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பில்லை.

யுகங்கள்

யுகங்கள்

இவை அனைத்தும் யூகங்கள். என்னால் விளக்க முடியாது.. அனால் இந்த விளைவுகளை எண்ணி மகிழ்சியடைகிறேன். இது நமது ஒட்டுமொத்த பொருளாதார மாதிரியான திராவிட மாடலுடன் தொடர்புடையது: அரசு நிறைய நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது மற்றும் தனிநபர் நுகர்வு அதிகமாக உள்ளது. சில பலவீங்களும் உள்ளன. நம் மாநிலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன, திடக்கழிவுகள் அதிகமாக உருவாகின்றன, கழிவுநீர் அடைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், நகர்மயமாக்கல் பெருகுகிறது ஆனால் உட்கட்டமைப்புகள் அதனை தாக்குப் பிடிக்கும் நிலையில் இல்லை.

அதிக நுகர்வு உள்ளது

அதிக நுகர்வு உள்ளது

நம்மிடம் ஏற்கனவே அதிக நுகர்வும், உயர்ந்த பாதுகாப்பு கட்டமைப்பும், மாநில அரசின் நலத்திட்டங்களும் உள்ளன. எனவே, பணவீக்க்கம் சிறிய அளவுக்கே அதிகரித்தது, மற்றும் அதனால் ஏற்படும் இடையூறுகளும் மோசமாக இல்லை. எங்களிடம் சிறந்த உள்கட்டமைப்பும், சிறந்த விநியோகச் சங்கிலியும் உள்ளன. நிதிப்பற்றாக்குறையில், நாங்கள் சற்று சிறப்பாக நிலையில் உள்ளோம், அதற்குக் காரணம், போதுமான அளவு நிதியினை வேகமாகச் செலவழிக்க முடியவில்லை. ஏனெனில் கோவிட் இரண்டாவது அலையின் விளைவாக மூலதனப் பணிகளைச் செய்ய முடியாமல் போனது, பின்னர் மழை பெய்தது.... மூலதனப் பணிகளில் கூட, எங்களுக்கு ஒரு பெரிய தடை இருந்தது. இது பண போதாமை அல்ல, அது செயல்படுத்துவதில் உள்ள போதாமை.

நிதி பற்றாக்குறை குறைவு

நிதி பற்றாக்குறை குறைவு

நிதி பற்றாக்குறை 4.6 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இறுதிப் புள்ளி விவரங்கள் வரும்போது அது 3.5 சதவீதத்தை நெருங்கும். மூலதனம் பணிகளுக்கான செலவுகளை GSDPஇல் [மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி] 1 சதவிகிதத்தைக் கூட குறைக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. இது எங்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்தது. வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைப்பதில் எங்கள் கவனம் இருந்தது, அதில் நாங்கள் நன்றாகவே பணியாற்றியுள்ளோம் - அது புள்ளிவிவரங்களில் மதிப்பிடபட்டுள்ளதைவிட சிறப்பான பணி என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் முந்தைய ஆட்சியாளர்கள் பிப்ரவரி[2021]இல் இடைக்கால பட்ஜெட்டை முன்வைத்தபோது அவர்கள் எதிர்பார்த்ததை விட ரூ.20,000 கோடிக்கு மேல் நாங்கள் செலவழித்தோம், என்று தனது பேட்டியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+