ஜப்பானிலிருந்து இறக்கப்பட்ட மாஸ்டர்மைண்ட்! தமிழ்நாடு முழுக்க நடைபாதைகள் அமைக்க முடிவு! ஏன் தெரியுமா?
சென்னை: ஆரோக்கியத்தை முன்னிலைப் படுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்றை நவம்பர் 4-ந்தேதி தொடங்கவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் நிறைய திட்டங்களை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அதை நிறைவேற்றி வருகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சமீபத்தில் அவர் ஜப்பான் சென்றிருந்த போது, முதுமையிலும் பலர் ஆரோக்கியமாக இருப்பதை கண்டார்.
குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரக்கூடிய எந்த ஒரு நோயும் பெரும்பாலான முதியவர்களுக்கு இல்லை என்பதை கண்டறிந்துள்ளார் மா.சு. ! இதற்கான, காரணத்தையும் அறிந்துள்ளார். அதாவது, ஜப்பானில் நடை பாதைகளில் முதியவர்களுக்கென்று 8 கி.மீ. தொலைவிற்கு நடைபயிற்சி நடைபாதை ஒன்றை ஜப்பான் அரசு உருவாக்கியிருப்பதும் அதில் முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதும்தான் என்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறார்.

இதனை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இறங்கிய அமைச்சர் மா.சு., அது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்க, அருமையான திட்டம் என பாராட்டிய முதல்வர், அதற்கு க்ரீன் சிக்னல் தந்திருக்கிறார். அதன்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் 'நலவாழ்வு நடைபயிற்சி சாலைகள் ' எனும் திட்டத்தை நவம்பர் 4-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
( ஈசிஆர் சாலையில் இனி ராக்கெட் வேகத்தில் பறக்கலாம்.. 4 வழி சாலை பணிகள் பாதி ஓவர்.. மக்கள் குஷி! )
முதல் கட்டமாக சென்னையில் அடையாறு முதல் பெசன்ட் நகர் பீச் வரை இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதிகாலையில் மட்டும் இங்கே வாகனங்கள் செல்லாமல் மக்கள் மட்டும் நடக்கும் விதமாக சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் முதியவர்களின் ஆரோக்கியத்தை முன்வைத்து தொடங்கப்பட உள்ளது. நடைமுறைக்கு வரும்போது இந்த திட்டம் பல்வேறு தரப்பிலும் பாராட்டு பெறும் என நம்புகிறாராம் ஸ்டாலின்.
ஆரோக்கியம்: மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பொருட்டு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ₹25 கோடி செலவில் நீலாங்கரை மற்றும் அக்கரை இடையே 5 கிமீ சைக்கிள் டிராக்கை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
சிஎம்டிஏ உறுப்பினர்-செயலாளர் அன்ஷுல் மிஸ்ரா கூறுகையில், கடற்கரையோர மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஈசிஆர் கடற்கரைகளில் கூடு கட்ட வரும் ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சிஎம்டிஏ ஆய்வு செய்து வருகிறது.

சைக்கிள் ஓட்டும் பாதை கடற்கரையோரம், குடியிருப்புப் பகுதிகள் வழியாகச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடற்கரையோரம் உள்ள பாதையில் மரம், உலோகம் மற்றும் பிற பொருட்கள் வைத்து இந்த சாலை அமைக்கப்படும். இதனால் சுற்றுச்சூழல் நிலப்பரப்பு பாதிக்கப்படாது. வீடுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கரையோரத்தில் இருந்து, குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லும் பாதையில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் கூரை அமைக்கப்பட்டு இருக்கும். திட்டமிடல் குழு சார்பாக இது தொடர்பாக மீனவ சமூகங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அவர்களின் குறைகள் கேட்கப்பட்டது.
அவர்களுக்கு சிக்கல் இல்லாமல்.. அவர்களின் படகுகள் பாதிக்கப்படலாம் இங்கே டிராக் அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இங்கே மீனவர்கள் கப்பலை நிறுத்த அரங்கு, வலைகளை காய வைக்க அரங்குகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடல் அலைகள் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கு அருகே இந்த கட்டுமானங்கள் செய்யப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications