ஆஹா.. புதுசா இருக்கே.. மோடிக்கு திடீரென பாதுகாப்பு தரும் தமிழ்நாடு போலீஸ் டீம்.. என்ன காரணம்?
சென்னை: லட்சத்தீவு சென்று இருக்கும் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். தமிழ்நாடு போலீசார் வழங்கும் இந்த பாதுகாப்பு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
நேற்று திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில்.
2024-ம் ஆண்டின் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி. தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு ரூ20,000 கோடி திட்டங்கள் தொடக்கம்.. எனது தமிழ் குடும்பமே முதலில் உங்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

என்ன சொன்னார் ?; 2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்தனர். 2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது. விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்னர் காலமானார். சினிமாவில் மட்டும் கேப்டன் விஜயகாந்த் அல்ல அரசியலிலும் கேப்டன். விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். பொருளாதார, கலாசார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது.
தமிழ் மொழி: தமிழ்நாட்டுக்கு வரும்போது புதிய சக்தி கிடைக்கிறது உலகில் எங்கே பேசினாலும் தமிழ்நாட்டை, தமிழ் மொழி பெருமையை பேசுகிறேன். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நடத்தினோம்.
தமிழ் மொழி கலாசாரம், மொழி தொடர்பான உற்சாகம் அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் நவீன கட்டமைப்புகளில் மிகப் பெரிய முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உலகின் 5வது பொருளாதார சக்தியாக இந்தியா திகழ்கிறது.
தமிழ்நாடு அடையாளம்: மேக் இன் இந்தியாவின் அடையாளமாக தமிழ்நாடு மாறுகிறது. மாநில வளர்ச்சி மூலம் தேச வளர்ச்சி என்பதே நமது அடிப்படை. 40க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தமிழ்நாட்டில் 400 முறை பயணம். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தால் 3 மடங்கு வளர்ச்சி. நாடு விடுதலைக்கு பின் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைத்தோம். மீனவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வசதி அளித்துள்ளோம். மீனவர்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை வழங்கி வருகிறோம்.
விஜயகாந்த்: தமிழ் மொழியை புகழாமல் என்னால் ஒருபோதும் இருக்க முடியாது. தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் எனக்குள் ஒரு புதிய சக்தியை நிரப்பிக் கொண்டு செல்கிறேன். எப்போதெல்லாம் தமிழ்நாடு வருகிறேனோ, அப்போதெல்லாம் எனக்குள் ஒரு புதிய சக்தியை நிரப்பிக் கொண்டு செல்கிறேன்.
விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் இரங்கல் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான் அனைத்தையும் விட தேசத்தை அதிகம் நேசித்தவர் விஜயகாந்த் .விஜயகாந்த் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அரசியலில் தேசிய நலனையே எல்லாவற்றையும் விட அதிகமாக முன்னிறுத்தினார் விஜயகாந்த் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
லட்சத்தீவு: இந்த நிலையில் லட்சத்தீவிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே பள்ளி விழா ஒன்றில் அவர் கலந்து கொள்ள உள்ளார். லட்சத்தீவு சென்று இருக்கும் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். தமிழ்நாடு போலீசார் வழங்கும் இந்த பாதுகாப்பு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது
அங்கே போலீசார் இருந்தாலும்.. மற்ற மாநில போலீசார் அளவிற்கு வலிமையானவர் இல்லை. பொதுவாக பிரதமர் எங்கே சென்றாலும் அங்கே மாநில போலீசாரும் பாதுகாப்பு செய்வார்கள். அந்த வகையில் லட்சத்தீவில் அதிக பலமான போலீசார் படை இல்லை என்பதால் தமிழ்நாடு போலீசார் படை அப்படியே திருச்சியில் இருந்து பிரதமர் உடன் சென்றுள்ளனர்.
ஒரு எஸ்பி, டிஎஸ்பி மற்றும் 4 போலீசார் படை மோடியுடன் பாதுகாப்பிற்காக சென்று உள்ளனர் .












Click it and Unblock the Notifications