Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛பின்னணியில் மெகா கடன்’’.. தமிழகத்தில் 4.83% மின்கட்டணம் உயர்வு ஏன்? மின்வாரியம் முக்கிய விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் என்பது அதிரடியாக உயர்த்தப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மொத்தம் 4.83 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மின்கட்டண உயர்வுக்கான காரணத்தை கூறி தமிழக அரசு சார்பில் டேன்ஜெட்கோ எனும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் என்பது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 400 யூனிட் வரையிலான மின்சார பயண்பாட்டுக்கான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 20 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.

power tariff eb tangedco

அதன்படி 400 யூனிட் வரையிலான மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கான கட்டணம் ரூ.4.60ல் இருந்து ரூ.4.80 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் 401 - 500 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 501 முதல் 1000க்கு மேலாக பயன்படுத்துவோரின் மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் வணிக பயன்பாட்டிற்கான மின்கட்டணத்தை பொறுத்தவரை ஒரு கிலோ வாட் மின்சாரம் ரூ.307 ஆக இருந்த நிலையில் இனி ரூ.322 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 112 கிலோவாட்டுக்கு மேல் ரூ.562 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.589 வசூல் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் 112 கிலோவாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.27 வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மின்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் தான் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு ஏன்? என்பது பற்றி அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2011-12ம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டமொத்த நிதி இழப்பானது கடந்த 10 ஆண்டுகளில் ரூ.94,312 கோடி மேலும் அதிகரித்து 31.03.2021 வரை ரூ.1.13,266 கோடியாக உயர்ந்தது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை 2021-22ம் ஆண்டில் இருந்து 100 சதவீதம் முழுமையாக அரசே ஏற்று கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால் தமிழ்நாட மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்த கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

இதன் விளைவாக 2011-12ம் ஆண்டில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்திற்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து (2021-2022) வரை ரூ.1,59,823 கோடியாக மாறியது. இதன் விளைவாக கடந்த 2011 -12ம் ஆண்டில் ரூ.4,588 கோடியாக இருந்த கடன்களின் மீதான வட்டியானது 259 சதவீதம் அதிகரித்து 2020-21ம் ஆண்டில் ரூ.16,511 கோடியாக உயர்ந்தது. இவ்வாறு அதிகரித்து வரும் நிதி இழப்பை ஈடுசெய்ய அப்போதைய மின்வாரிய கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதன் பின்னர், அதிகமான மின்கட்டண உயரவினால் மின் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய சுமையினை கருத்தில் கொண்டு இந்த அரசானது நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டுதோறும் சிறிய அளவில் மின்கட்டண உயர்வை அமுல்படுத்தி வருகிறது. மத்திய மின் அமைச்சகத்தின் வழிக்காட்டுதல்களின்படி விநியோக முறையை வலுப்படுத்தும் (RDSS) திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதியை பெறுவதற்காக ஆண்டுதோறும் மின்கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும்.

இந்த வகையில் 2022-23 நிதி ஆண்டிற்கான மின்கட்டண உயர்வானது 01.04.2022க்கு மாறாக 10.09.2022 முதல் சுமார் 7 மாதத்திற்கு மட்டுமே உயர்த்தப்பட்டது. மேலம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பல்லாண்டு மின்கட்டண வீத ஆணையின் படி கடந்த 01.07.2023 முதல் நகர்வோர் விலை குறியீடு எண் அடிப்படையில் அனைத்து மின்னிணைப்பகளுக்கும் உயர்த்தப்பட வேண்டிய 4.7 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிராக மின் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு 2.18 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான இந்த 2.18 சதவீத உயர்வம் முழுவதுமாக இந்த அரசே மின் மானியம் மூலம் ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி 6 சதவீத வரை மின்கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 2024 ஜுலை மாதத்தை பொறுத்த வரையில் 2023 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 178.1 மற்றும் 2024 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 186.7 ஆகியவற்றின் நுகர்வோர் விலை குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால் 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். அதனடிப்படையில் இன்று கட்டண உயர்வு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+