"இப்போது முடியாது.." குறுக்கே புகுந்த ஓமிக்ரான் பரவல்.. ஒத்தி வைக்கப்பட்ட முதல்வரின் பல வருட பிளான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாடு சட்டசபை மீண்டும் கலைவாணர் அரங்கத்தில் நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜார்ஜ் கோட்டையில் கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Recommended Video

    தற்காலிக சிகிச்சை மையங்கள் ரெடி பண்ணுங்க.. மாநிலங்களுக்கு மத்திய அரசு அலர்ட்!

    தமிழக சட்டப்பேரவையின் 2022 ஆம் ஆண்டுக்கான முதம் கூட்டம் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ந்தேதி கூடுகிறது. ஓமிக்ரான் பரவல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தாக்கத்தால் கடந்த 2 வருடங்களாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் பேரவைக் கூட்டம் நடந்து வருகிறது. அங்கு இருக்கும் இடவசதி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    தலைமை செயலகம்

    தலைமை செயலகம்

    கடந்த மாதம் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைவாக இருந்தது. இதனால் இந்த வருடம் ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை அரங்கில் கூட்டம் நடக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் பேரவைச் செயலகம் செய்து முடித்து இருந்தது. ஜார்ஜ் கோட்டையில் காகிதமில்லா பேரவையை நடத்தும் வகையில் ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கையிலும் கணிணி பொறுத்தும் பணிகள் நடந்தன.

    ஏற்பாடுகள் தீவிரம்

    ஏற்பாடுகள் தீவிரம்

    கடந்த பட்ஜெட் போல இந்த முறையும் கூட்டத்தொடரில் பேப்பர் எதுவும் பயன்படுத்தப்படாது. எம்எல்ஏக்கள் எல்லோருக்கும் சிறிய அளவிலான டேப்லேட் அளிக்கப்பட உள்ளது. இதற்கு ஏற்றபடி ஜார்ஜ் கோட்டையில் தூய்மை செய்யும் பணிகள் முடிந்து, இருக்கைகள் மாற்றப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. அதேபோல் பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக லைவில் ஒளிபரப்பும் முடிவில் திமுக அரசு இருந்தது.

    கேமரா

    கேமரா

    அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது பேரவைச் செயலகம். ஜார்ஜ் கோட்டையில் பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணிகளும் நடந்தன. இது திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றாகும். பல வருடமாக திமுக இப்படி சட்டசபை நிகழ்வுகளை லைவில் ஒளிபரப்ப வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தது. ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஓமிக்ரான் பரவல் ஏற்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது பேரவைச் செயலகம். ஜார்ஜ் கோட்டையில் பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணிகளும் நடந்தன. இது திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றாகும். பல வருடமாக திமுக இப்படி சட்டசபை நிகழ்வுகளை லைவில் ஒளிபரப்ப வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தது. ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட நிலையில் மீண்டும் ஓமிக்ரான் பரவல் ஏற்பட்டுள்ளது.

    கேஸ்கள்

    கேஸ்கள்

    இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் கேஸ்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாடு சட்டசபை மீண்டும் கலைவாணர் அரங்கத்தில் நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜார்ஜ் கோட்டையில் செய்ய ஏற்பாடுகள் எல்லாம் வீணாகி உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவி உரையுடன் இந்த கூட்டம் நடக்க உள்ளது. ஜார்ஜ் கோட்டையில் கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    லைவ் இல்லை

    லைவ் இல்லை

    இதனால் இந்த முறையும் கூட்டத்தொடரில் லைவ் ஒளிபரப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. ஜார்ஜ் கோட்டையில் கூட்டம் நடக்கும் போதுதான் லைவில் ஒளிபரப்பு செய்யப்படும். கலைவாணர் அரங்கில் லைவ் ஒளிபரப்பு செய்யப்பட வாய்ப்பு இல்லை. அதனால் இப்போதும் சட்டசபை நிகழ்வுகளை லைவில் பார்க்க முடியாது என்று ஆளும் தரப்பு தெரிவிக்கிறது.

    முதல்வர் பிளான்

    முதல்வர் பிளான்

    தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது போல் பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவோம். கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்றதால் இந்த நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதில் சிக்கல் இருக்கிறது. ஜார்ஜ் கோட்டைக்கு சென்றதும் லைவில் ஒளிபரப்புவோம் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்த முறையும் ஓமிக்ரான் பரவலால் முதல்வரின் "லைவ் ஒளிபரப்பு" திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டு இருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+