அதென்ன மார்ச் 31ம் தேதி வரை.. அதுக்குள்ள கொரோனா ஒழிஞ்சிருமா.. லீவு கணக்கால் குழப்பத்தில் மக்கள்!
சென்னை: நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதென்ன 31 ஆம் தேதி என்ற ஒரு கணக்கு. ஏதோ நகைக் கடையின் சஸ்பென்ஸ் விளம்பரம் போல்... என்பதுதான் கேள்வியாக உள்ளது.
Recommended Video
எங்கோ சீனாவின் மூலை முடுக்கில் இருந்த கொரோனா அந்நாடு முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு மொத்தம் 3213 பேர் பலியாகிவிட்டனர். இதையடுத்து இந்த வைரஸ் அப்படியே விசா,பாஸ்போர்ட் இல்லாமல் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது.
முதன்முதலாக கொரோனாவால் டெல்லி பாதிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து இந்த மாதம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் விடுமுறை
இதைத் தொடர்ந்து பெங்களூர், கேரளா, மேற்கு வங்கம், தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், புராதனச் சின்னங்கள், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதென்ன கணக்கு?
அது போல் நேற்றைய தினம் நாடு முழுவதும் வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகளும் 31-ஆம் தேதி வரை நடைபெறாது என கூறியுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை, விடுமுறை எல்லாம் சரி ஆனால் அதென்ன 31-ஆம் தேதி வரை என்ற ஒரு கணக்கு? என்பது கேள்வியாக உள்ளது. ஏதோ டிவியில் போடும் நகைக் கடை, துணிக் கடை விளம்பரம் போல் இருக்கிறது.

தாக்கம்
31-ஆம் தேதிக்குள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிடுவார்களா? இல்லை அதுவாகவே வந்தவழியை பார்த்துக் கொண்டு திரும்பி சென்றுவிடுமா என தெரியவில்லை. இல்லை அந்த கிருமி நம்மை தாக்கினாலும் சாதாரண காய்ச்சலுக்கான தாக்கத்தையே கொடுக்கும் அளவுக்கு அதன் வீரியத்தை கட்டுப்படுத்துவார்களா என்பது தெரியவில்லை.

நீட்டிப்பு
இல்லை 31-ஆம் தேதிக்கு மேல் கொரோனா பரவவே பரவாதா? என்பன உள்ளிட்ட கேள்விகள் பல எழுந்துள்ளன. பள்ளிகளுக்கு ஓகே இனி கோடை விடுமுறை என்பதால் இந்த கேள்வி எழ அவசியமில்லை. ஆனால் மற்ற வணிக வளாகங்கள், நிறுவனங்கள், உள்ளிட்டவை மூடுவதுதான் பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை தற்போது குறைந்த கால விடுப்பாக 31-ஆம் தேதி வரை அறிவித்துவிட்டு பின்னர் நீட்டிப்பரா என்றும் தெரியவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications